இஸ்ரேல் எச்சரிக்கை: ‘தெற்கு லெபனானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் ’

தெற்கு லெபனானிலுள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஹிஸ்புல்லாக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் ராணுவத்தை அதற்கு எதிராக செயல்படத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வீடுகளை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம், அவர்களின் இடங்கள், ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் உயிரை பணையம் வைக்கிறார்கள் என்பது பொருள்” என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ஈரான் – இஸ்ரேல் மோதல் பள்ளி மாணவர்கள் சண்டை மாதிரி இருக்கு..! தம்பி அப்படியே அடிச்சுக்கோங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று பேசிய டொனால்டு டிரம்ப், பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் தலையிட்டாக வேண்டும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.