போஸ்டில், டிக் டாக்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்..!

ஈரானில், இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரப்போவதாக ஈரான் ராணுவம் ட்வீட் ஒன்று செய்துள்ளது. ஈரான் ராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என குறிப்பிட்டு உள்ளனர்.

முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3-வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்ற தகவல் கசிந்தது உள்ளது.

இஸ்ரேல் அறிவிப்பு: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல் முடித்துவிட்டோம்..!

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2-வது வீடியோவில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்.

நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலில் ஈரான் அரசு செயல்பாடுகள் முடங்கியதா..!?

ஈரான் அரசின் செயல்பாடுகள் இஸ்ரேல் உளவுத்துறையின் சைபர் தாக்குதலால் முடங்கியுள்ளன. மேலும் அணுசக்தி தளங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பு விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போன்களைத் தவிர பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகள் போன்ற மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செக் இன்கள் மற்றும் லக்கெஜ்களில் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரானில் விமான பயணிகள் செல்போன்களைத் தவிர மற்ற எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் இன்டர்நேஷனல் இங்கிலீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த மாதம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் ஆகியவை திடீரென வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 3000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அரசு மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாயிலிருந்து அல்லது துபாய் வழியாக செல்லும் விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்களின் பேஜர்கள் மற்றும் வாக்கிடாக்கிகளை தடை செய்தது. முன்னதாக நேற்று ஈரானில் கடுமையான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் அரசின் நீதித்துறை, சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஈரான் அரசு செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

மேலும் அந்த துறைகளின் தகவல்கள் திருடப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்தது. மேலும் தங்களின் அணுசக்தி வசதிகள், எரிபொருள் விநியோகம், நகராட்சி நெட்வொர்க்குகள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் சர்வதேச அமைப்பு தெரிவித்தது.

இஸ்ரேல் எச்சரிக்கை: ‘தெற்கு லெபனானை விட்டு மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் ’

தெற்கு லெபனானிலுள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஹிஸ்புல்லாக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் ராணுவத்தை அதற்கு எதிராக செயல்படத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வீடுகளை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம், அவர்களின் இடங்கள், ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் உயிரை பணையம் வைக்கிறார்கள் என்பது பொருள்” என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

Yair Labit: ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் பதிலடி..! சிரியா, ஈராக், ஏமன், லெபனான், காசாவுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கும்..!

இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் லாபிட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாயர் லாபிட் எக்ஸ் பக்கத்தில், “நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் குறிப்பிடத்தகுந்த கடுமையான விலையைக் கொடுத்த ஆகவேண்டும். இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பது ஈரானுக்குத் தெரியும். அந்த பதிலடி மிகவும் கடுமையானதாகவும், சிரியா, ஈராக், ஏமன், லெபனான், காசா மற்றும் ஈரானுக்கு தெளிவான ஒரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் இருக்க வேண்டும்” என யாயர் லாபிட் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் மோதல் பள்ளி மாணவர்கள் சண்டை மாதிரி இருக்கு..! தம்பி அப்படியே அடிச்சுக்கோங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1 என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மீதான தாக்குதலை முறியடிக்கும்படி அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் பைடன் தலைமையிலான ஆளும் ஜனநாயக கட்சிக்கு இந்த போர் சூழல் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல்- ஈரான் சண்டை குறித்து குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று பேசிய டொனால்டு டிரம்ப், பள்ளி வளாகத்தில் இரண்டு குழந்தைகள் சண்டைபோட்டுக் கொள்வதுபோல இது உள்ளது. சில நேரம், என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்கு நீங்கள் அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். ஆனால் நிச்சயம் இது மோசமான போர். இது எங்கு சென்று முடியும்? அவர்கள் 200 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர், இது நிச்சயம் நடக்கக்கூடாத ஒன்று, எனவே மத்திய கிழக்கில் நாம் தலையிட்டாக வேண்டும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை: “ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்”

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். தங்களை தற்காத்து கொள்வதற்கான வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், “ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. அதற்கான விலை கொடுத்தாக வேண்டும். எங்களை தற்காத்து கொள்ள எங்களுக்கு இருக்கும் வலிமையும்,எதிராளிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியை பற்றியும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை.,”என தெரிவித்தார்.

இக்கட்டான நேரத்தில் பக்கபலமாக இருந்த அமெரிக்காவுக்கும் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரான் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வரலாம் என்றும் இஸ்ரேல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஹசன் நஸ்ரல்லா கொல்லைக்கு..! இஸ்ரேல் மீது “Fattah 1”.. ராட்சசனை அவிழ்த்துவிட்ட ஈரான்..!

ஹசன் நஸ்ரல்லா கொல்லைக்கு இஸ்ரேல் மீது “Fattah 1” ராட்சசனை அவிழ்த்துவிட்ட ஈரான். ஈரான், இதுவரை இஸ்ரேல் மீது நேரடியாக தாக்குதல் நடத்தாமல் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது. இந்நிலையில் மிகப்பெரிய அளவில் இஸ்ரேலை நேரடியாக ஈரான் தாக்கி உள்ளது.

இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா இயக்கத்தை இஸ்ரேல் கதி கலங்க வைத்து வந்தது. மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வாக்கி டாக்கி மற்றும் பேஜர் தாக்குதலுக்கு உள்ளாகி 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மறைந்து இருந்த பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இதுமட்டுமின்றி, லெபனான் உள்ளே புகுந்து இஸ்ரேல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கெல்லாம் பதிலடியாகவே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் “Fattah 1 மற்றும் Fattah 2” ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.

Fattah 1என்பது ஈரானின் ஹைப்பர்சோனிக் நடுத்தர தூர ஏவுகணைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் உருவாக்கப்பட்டு 2023 இல் அந்த ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒரே வருடத்தில் இதை ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. இது ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை அதிக சூழ்ச்சித்திறன், வேகம் காரணமாக இஸ்ரேலின் அயர்ன் டோமை மிஞ்சி, இஸ்ரேல் உள்ளே புகுந்து இந்த ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.