IPL -2025: KL. ராகுல் “ஆக்ரோஷமாக” செய்ததை “நக்கலாக” செய்து காட்டிய விராட் கோலி..!

“இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என “ஆக்ரோஷமாக” KL. ராகுல் செய்ததை “நக்கலாக” விராட் கோலி செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. IPL -2025 தொடரின் 24-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த KL. ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சேசிங்கை முடித்து வைத்தார். அந்த வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும், அவர் ‘இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்து காட்டினார்.

அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இதேபோல பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதோபோலவே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டிக்குப் பிறகு, KL. ராகுல் “இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்தது போலவே, விராட் கோலியும் அவர் முன் “நக்கலாக” அதே சைகையை செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

IPL 2025: 17 பந்துகளில் அரைசதம்..! 35 பந்துகளில் சதம் அடித்து இமாலய சாதனை படைத்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார். IPL -2025 தொடரின் 47-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலப்பரீட்சை நடத்த வருகின்றன.ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜாஸ் பட்லர் சுப்மன் கிலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுப்மன் கில் 29 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் அடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 16. 4 ஓவரில் 167 ரன்கள் எடுத்திருந்த போது மொரவக்ககே மகேசு தீக்சனவின் பந்து வீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழக்க ஜாஸ் பட்லருடன் டெவாட்டியா ஜோடி சேர 20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்களாக 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் ரேட் கிட்டத்தட்ட இருந்தது.  மேலும் அதிரடியாக விளையாடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார்.

IPL 2025: ஆயுஷ் மாத்ரேவை தட்டிக்கொடுத்த சூர்யகுமார் யாதவ்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

18 -வது IPL தொடரின் 38-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 8-வது இடத்திலுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 10-வது இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளே ஆப் சுற்று முன்னேற வதற்கான பலப்பரீட்சை நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை CSK அணி எடுத்துள்ளது.இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே IPL தொடரில் அறிமுகமாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே விக்கெட் இழந்து வெளியேறிய போது சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

IPL -2025: அழுது கொண்டே பெவிலியன் திரும்பிய வைபவ் சூர்யவன்ஷி

IPL வரலாற்றிலேயே 14 வயதில் களமிறங்கிய முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. IPL -2025 தொடரின் 36-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக IPL வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.

இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4-வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.

IPL தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். IPL மெகா ஏலம் நடைபெற்ற போது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13 அவரின் அடிப்படை விலை 30 லட்சமாக தான் இருந்தது. ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்ட அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து.

இந்நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழியை போல கொஞ்சம் கூட பயமே இன்றி சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரியாக அவர் விரட்டினார். வெறும் இருபதே பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 170 ஸ்ட்ரைக் ரேட்டில் 34 ரன்கள் அடித்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் ரேட் பத்துக்கு மேல் இருந்தது. இந்நிலையில், யஷஸ்வி – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணியை பிரிக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 7 ஓவர்கள் முடிவதுற்குள் 6 பந்து வீச்சாளர்களை மாற்றியும் பயனில்லை.

இத்தனை தொடர்ந்து ரிஷப் பண்ட் மீண்டும் எய்டன் மார்க்ரமிற்கு இரண்டாவது ஓவர் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 ஓவரில் 85 ரன்கள் இருந்தபோது ரிஷப் பண்டின் அபார ஸ்டம்பிங்கில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் மனமுடைந்த வைபவ் சூர்யவன்ஷி அழுது கொண்டே பெவிலியன் நோக்கி திரும்பினார்.

IPL -2025: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த 14 வயது இளங்கன்று வைபவ் சூர்யவன்ஷி..!

IPL வரலாற்றிலேயே 14 வயதில் களமிறங்கிய முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. IPL -2025 தொடரின் 36-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக IPL வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.

இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4-வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.

IPL தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். IPL மெகா ஏலம் நடைபெற்ற போது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13 அவரின் அடிப்படை விலை 30 லட்சமாக தான் இருந்தது. ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்ட அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து.

இந்நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ரிஷப் பந்த்: குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல..! டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது..!

குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது என டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடியது குறித்து ரிஷப் பந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார். IPL 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

ஆனால், டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி IPL 2025 வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இத்தனைத் தொடர்ந்து, டெல்லி கேபிட்டல்ஸ் விளையாடியது குறித்து ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது. நான் நினைத்துப் பார்க்காத வகையில் வளர்ந்துள்ளேன். நான் ஒரு இளைஞனாக டெல்லி அணிக்கு வந்தேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.

இந்தப் பயணத்தை பயனுள்ளதாக்கியது ரசிகர்களாகிய நீங்கள்தான். என் வாழ்க்கையின் கடினமான ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை அரவணைத்து, என்னை உற்சாகப்படுத்தி, எனக்கு ஆதரவாக நின்றீர்கள். நான் முன்னேறும்போது, உங்கள் அன்பையும் ஆதரவையும் என் இதயத்தில் சுமக்கிறேன். நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது குடும்பமாக இருப்பதற்கும் இந்தப் பயணத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும் நன்றி” என ரிஷப் பந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.