14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று துபாய் சர்வதேச மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் பலப்பரீட்சை இன்று நடைபெற்று வருகிறது.
அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் மீண்டும் அதிரடியை கையில் எடுத்தபோது ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்த நிலையில் 3.2 ஓவரில் ஜோஷ் ஹேசில்வுடிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 8 பந்துகள் சந்தித்து 1 ரன் எடுத்து நிலையில் ஜோஷ் ஹேசில்வுடிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர், ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி மொயீன் அலி 9.4 ஓவரில் அக்சர் பட்டேல் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்த்தார். அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பிரித்வி ஷா 60 ரன்கள் எடுத்த நிலையில் 10.2 ஓவரில் ரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர், ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி முதல் ஓவரிலன் நான்காவது பந்தில் பாப் டு பிளிஸ்சிஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்த்தார். ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.