T 20 உலகக்கோப்பை நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்துடன் ரவிசாஸ்திரி பயிற்சி முடிவுக்கு வந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். 59 வயதான ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. மேலும் தொடர்ந்து 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்தில் இருந்தது.

 இதுமட்டுமின்றி ரவிசாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டு போட்டிகள் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 51-ல் வெற்றியும் பெற்றது. ஆனால் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியோடு வெளியேறியது. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது.

இன்று T 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியை கூட எட்டவில்லை. நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே ரவிசாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும்.

இந்திய அணியை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியினரும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு ஆதரவு தெரிவித்தனர்

அமெரிக்காவில் மின்னபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் கடந்த ஆண்டு மே 25ம் தேதி காவல்துறை கைது செய்து, காருக்கு வெளியே தள்ளி கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து நெரித்ததில் நடுரோட்டிலேயே பரிதாபமாக ஜார்ஜ் பிளாய்ட் பலியானார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் பிளாய்ட் மரணம் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடையவும் அளவிற்கு அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது அமெரிக்காவில் நிலவும் நிறவெறி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பலைகளை உருவாக்கியது, கண்டனத்தை எழுப்பியது.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாகவும் , இனவெறிக்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென் ஆப்பிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.