உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆனால் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேற மீண்டும் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். ஆனால் ஹசன் அலியின் 5.4 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட், விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். ஷதாப் கானின் 12.2 ஓவரில் ரிஷப் பன்ட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது.