படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 60,000 டாலர் சம்பாதித்து வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை மோனிக் ஜெரமையா

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 60,000 டாலர் சம்பாதித்து வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை மோனிக் ஜெரமையாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வீடுகள் பற்றாக்குறை, அதிக செலவீனம் ஆகியவை காரணமாக ஒரே பெட்டை ஷிப்ட் முறையில் பகிர்ந்து கொள்ளும் முறை ஹாட் பெட்டிங். இது கப்பல், தொழில்துறை பகுதிகள், ராணுவ முகாம்கள் போன்ற அதிக நெருக்கடியான இடங்களில் வெவ்வேறு ஷிப்ட்களில் பணி செய்பவர்கள் இப்படி ஒரே படுக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் பகிர்ந்து கொள்ளும் முறை பல நாடுகளில் நடைமுறையில் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தை சேர்ந்தமோனிக் ஜெரமையா ஒரு ஆசிரியை. கொரோனா பரவலுக்கு முந்தைய காலக் கட்டத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு தொழில் வீழ்ச்சி அடைந்தது. மேலும் ஆசிரியை வேலையும் ஆன்-லைன் கல்விக்கு மாறியதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

இதனால், தனது வருமானத்தை பெருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெரமையாவுக்கு புதிய யோசனை ஒன்று தோன்றியுள்ளது. அதாவது ஹாட் பெட்டிங் என்ற ஐடியா வந்துள்ளது. அதாவது, இந்த ஹாட் பெட்டிங் முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் பகிர்ந்து கொண்டாலும் நட்பு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் அமல்படுத்தப்படுகிறது.

இப்படி படுக்கையை பகிர்ந்து கொள்ள மாதம் 60000 ஆயிரம் டாலர் வாடகை கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் அடிப்படையில் கிர்ந்து கொள்வலாம். இதுதொடர்பாக டிக்-டாக்கில் மோனிக் ஜெரேமியா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.