ICC தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.
ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்பின் 3 விக்கெட்டுக்கு விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து எந்த பதற்றமும் இல்லாமல் ஸ்பின்னர்களை இருவரும் வெளுத்து கட்டினர். விராட் கோலியின் அரைசதம் சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் விராட் கோலி அடிக்கும் 75-வது அரைசதம் இதுவாகும். இந்த அரைசதம் மூலமாக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி 12 ஆயிரம் ரன்களை விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி செய்துள்ளார்.
அதேபோல் ICC தொடர் வரலாற்றில் விராட் கோலி அடிக்கும் 24-வது அரைசதம் இதுவாகும். இதுவரை ICC தொடர்களில் 23 அரைசதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ICC நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 10-வது அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும் ல் ICC தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.