செக்குடியரசில் நடைபெற்று வரும் ஆஸ்ட்ராவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இதில் நேற்று பெண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி அமெரிக்காவின் கைட்லின் கிறிஸ்டியன் மற்றும் நியூசிலாந்தின் எரின் ரோட்லைப் ஜோடியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் சானியா மிர்சா ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கைட்லின் கிறிஸ்டியன் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.