சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை பந்தாடிய கே.எல்.ராகுல்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர்.

அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, பாப் டு டுபிளிசிஸுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் மொயீன் அலி(0), ராபின் உத்தப்பா(2), அம்பத்தி ராயுடு(4), மகேந்திர சிங் தோனி (12) என அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது மட்டுமின்றி அணியின் ரன்வேகம் குறைந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் 46 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். முகமது ஷமி வீசிய 20-வது ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ்( 76 ரன்கள், 8 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னொய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் மீண்டும் அதிரடியை கையில் எடுத்தபோது மயங்க் அகர்வால் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருபுறம் (12), சர்பராஸ் கான்(0), ஷாருக்கான்(8), மார்க்ரம்(13) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் கே.எல்.ராகுல் அதிரடியில் இறங்கினார்.

25 பந்துகளில் 50 ரன்களை கடந்தது மட்டுமின்றி பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களை விளாசிய 98 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இறுதியாக பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 35-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 111 ரன்கள் எடுத்த நிலையில் டுவைன் பிராவோ 13.2 ஓவரில் விராட் கோலி 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ், தேவதூத் படிக்கலுடன் ஜோடி சேர்த்தார். ஷர்துல் தாக்குர் 16.5 ஓவரில் ஏபி டிவில்லியர்ஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் , தேவதூத் படிக்கலுடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் ஷர்துல் தாக்குர் 16.6 ஓவரில் அதாவது அடுத்த பந்தே தேவதூத் படிக்கல் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் தீபக் சாஹர் 18.2 ஓவரில் டிம் டேவிட் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹர்ஷல் படேல், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் டுவைன் பிராவோ 19.2 ஓவரில் க்ளென் மேக்ஸ்வெல் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேலுடன் ஜோடி சேர்த்தார்.இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 156 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ 3விக்கெட்டுகளையும் , ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். யுஸ்வேந்திர சாஹல் 8.2 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, பாப் டு பிளிஸ்சிஸ்ஸிடன் ஜோடி சேர்த்தார்.

க்ளென் மேக்ஸ்வெல் 9.1 ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, மொயீன் அலியுடன் ஜோடி சேர்த்தார். ஷர்ஷல் பட்டேல்13.6 ஓவரில் மொயீன் அலி 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா,அம்பதி ராயுடுடன் ஜோடி சேர்த்தார்.ஷர்ஷல் பட்டேல்15.4 ஓவரில் அம்பதி ராயுடு 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்த்தார்.

இறுதியில் சுரேஷ் ரெய்னா 17 ரன்களும், மகேந்திர சிங் தோனி 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.