கொரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு பிரிட்டன்

உலகளவில் இன்றுவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பலவும் கொரோனாவை தடுக்கும் முயற்சியில் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த மால்னுபிராவிர் என்ற ஆன்ட்டி வைரல் மாத்திரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தைப் பிரிட்டன் பெற்றுள்ளது.

தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியம்

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. கொரோனா பரவத்தொடங்கி 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் குறையாமலேயே உள்ளது. கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது.

அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது. தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.