அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் சீன வெளியுறவு செய்தி தெடர்பாளர், ‘சீன ராணுவம் சட்டத்துக்கு உட்பட்டு எல்லைகளை கண்காணிக்கிறது. அத்துடன் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. ஆனால் சிறுவன் மாயமான இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என தெரிவித்துள்ளார்.