இந்தியா 2019 -ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட சந்திரயான் -2 திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், சந்திரயான் -3 திட்டம் பெற்ற இந்த சரித்திர வெற்றிக்கே சந்திரயான் -2 திட்டம் தான் உதவி இருக்கிறது. அது எப்படி, உலகிலேயே ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை செயற்கைக்கோளை அனுப்பி சாதித்து வந்த நிலையில், அதன் வரிசையில் 4 -வது நாடாக இந்தியா இணைந்து இருக்கிறது.
இதிலும் குறிப்பிடத்தக்க சாதனையை என்னவென்றால் மேலே சொல்லப்பட்ட 3 நாடுகளாலும் தொட முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 திட்டத்தின் மூலமாக இந்தியா தொட்டு உள்ளது. இவ்ளோ கஷ்டப்பட்டு அனுப்பி.. வெறும் 14 நாள் மட்டுமே ஆய்வு.. ஏன்? பெரிய காரணமே இருக்கு! இதற்காக பல்வேறு தோல்விகளையும் வலிகளையும் இஸ்ரோ சந்தித்து உள்ளது.
இந்தியா விஞ்ஞானிகள் நிலவில் கடந்த 2008 -ம் ஆண்டு இந்தியாவின் கொடியை நாட்ட விரும்பினார்கள். அதன்படி சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2008 -ம் ஆண்டு நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனால், அது தோல்வி அடைந்தது. அதில் இருந்து பாடம் கற்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சந்திராயன் -2 விண்கலத்தை கடந்த 2019 -ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நிலவை நோக்கி ஏவினர்.
ஆனால், ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பறப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது. அதன் தொடர்ச்சியாகவே சந்திரயான் -3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். இம்முறை எந்த நாடுகளுமே தொட்டிடாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடிவு செய்த இஸ்ரோ அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, கச்சிதமான திட்டத்துடன் கடந்த ஜூலை 14 -ம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவியது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையை பலமுறை சுற்றி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து அங்கும் சுற்றில் சுமார் 45 நாள் பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று நிலவை தொட்டு இருக்கிறது சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர். எல்லோரும் சந்திரயான் -2 ஐ தோல்வி திட்டம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், அது முழுமையாக தோல்வியடையவில்லை. ரோவர் இறங்கியதில் மட்டும்தான் பிரச்சனையே தவிர சந்திரயான் -2 திட்டத்தால் இன்று வரை இந்தியாவுக்கு பயன்கிடைத்து வருகிறது.
ஆம், சந்திரயான் -3 திட்டம் வெற்றிபெறுவதே சந்திரயான் -2 ஒரு முக்கிய காரணம். அதில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் இன்றும் நிலவை சுற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது தோல்வி அல்ல, வெற்றி படிக்கட்டுகள்.. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனை டிரெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ் நேற்று நிலவை சந்திரயான் -3 நெருங்கியவுடன் அதை வரவேற்றதே சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர்தான்.
அது சரியாக வேலை செய்து வந்ததால்தான் சந்திரயான் -3 இல் ஆர்பிட்டரையே வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது. சந்திரயான் -2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் -3 முறையாக நேர்த்தியாக தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் -3 வெற்றியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழுவிற்கும் பெரும் பங்கு உள்ளது.