இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஓர் பொருள் தான் வெல்லம். குறிப்பாக தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டதே கருப்பட்டியை பயன்படுத்தி நாம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அந்நிய பொருட்கள் மோகம் நம்மை நோயாளிகளாக இன்று மாற்றி வைத்துள்ளது.
நாம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கியமாக வாழ்ந்த கருப்பட்டியின் பயன்களை சான்று பார்போம். கருப்பட்டி மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. மேலும் இதன் மருத்துவ குணங்களால் இது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பட்டியில் இரத்த உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்தும், நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவும் மக்னீசியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது.
கருப்பட்டி வறட்டு இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுவது மட்டுமின்றி சுவாசப் பாதையில் உள்ள சளியை கரையச் செய்து இருமலில் இருந்து விடுபட உதவும். மேலும் இது ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
இன்று நம்மில் பலர் உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் சிலருக்கு உடல் பருமன் ஏற்படுகின்றது. இந்த உடல் பருமன் கவலையால் பலர் இருப்பது மட்டுமின்றி தேவையில்லாத பலவித சிகிக்சைகளை மேற்கொள்ளுகின்றனர். இதனால் பண விரயம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பக்க விளைவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
உடல் பருமன் என்ற கவலையில் இருப்பவர்களுக்கு கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரைக் குறைப்பது மட்டுமின்றி வயிற்றில் உள்ள உப்பு சத்தையும் குறைக்கும். எனவே உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தினமும் உணவில் கருப்பட்டியை சேர்த்துக் கொண்டால் பக்க விளைவுகள் இல்லாமல் உடல் பருமனை குறைத்து ஸ்லிம்மாக இருக்கலாம்.
நாம் அடிக்கடி உடல் சோர்வடைந்து ஆற்றல் குறைவாக இருப்பது போல் உணரும் போது, கருப்பட்டி சிறிது சாப்பிடுஙகள். இதில் உள்ள கலப்பு கார்போஹைட்ரேட்டுகள், வழக்கமான சர்க்கரையை விட வேகமாக உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் தினமும் கருப்பட்டி ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஆற்றல் சீரான அளவில் இருப்பது மட்டுமின்றி நீண்ட நேரம் சுறுசுறுப்பாக உங்களால் செயல்பட முடியும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதீத வலியால் அவதிபடுவார்கள் அவர்கள் கருப்பட்டியை உட்கொள்ளும் போது, அது உடலில் எண்டோர்பின்களை வெளியிடச் செய்து, உடலில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரித்து ரத்த அழுத்தத்தை குறைத்து இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
இவ்வளவு பயன்கள் மிகுந்த கருப்பட்டியை நம் முன்னோர்கள் நமக்கு விடு சென்றுள்ளார். ஆகையால் நாமும் நம் முன்னோர்கள் போல இனிவரும் காலங்களில் பயன்படுத்தி நாமும் நேயற்ற வாழ்வு வாழ்வோம்.