அதானி பவர் நிறுவனம் அதிரடி: பாக்கி பணம் கொடுக்கலனா இனி மின் விநியோகம் நிறுத்தப்படும்..!

பாக்கி பணம் கொடுக்கலனா இனி மின் விநியோகம் நிறுத்தப்படும் என வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு மின்சார விநியோகம் செய்வதில் பைரா நிறுவனம் 1,244 மெகாவாட், ராம்பால் நிறுவனம் 1,234 மெகாவாட், எஸ்எஸ் பவர் நிறுவனம் 1,224 மெகாவாட் என மின் விநியோகம் செய்து வரும் நிலையில் அதானி பவர் நிறுவனமும் 724 மெகாவாட் மின் விநியோகம் செய்து வருகின்றது.

இந்நிலையில், டாலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வங்கதேசத்தால் உரிய காலத்தில் அதானி நிறுவனத்துக்கு மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த முடியாமல் திணறி வருகிறது. வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும், சுமார் ரூ.1,500 கோடி கடன் கடிதத்தை வழங்குவதற்கும் அக்டோபர் 31 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. கிரிஷி வங்கி மூலமாக கடன் கடிதத்தை வழங்க பிபிடிபி முற்பட்டாலும், அது மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், டாலர் தட்டுப்பாடும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

நிலுவை காரணமாக, வங்கதேசத்துக்கான மின்சார விநியோகம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், நவம்பர் 7-ஆம் தேதிக்குள் நிலுவை தொகையான சுமார் ரூ.7,200 கோடி செலுத்தவில்லை எனில் மின்சாரம் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

India vs Bangladesh: 30/3 என இந்தியா சரிந்த போது சுப்மன் கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததும் ஸ்பெஷல்..!

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பந்து வீசியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 , கேப்டன் ரோகித் சர்மா 6, சுப்மன் கில் 0 , விராட் கோலி 6, ரிஷப் பந்த் 36, கேஎல் ராகுல் 16, என 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் என 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 , கேப்டன் ரோகித் சர்மா 5, விராட் கோலி 17 என ஆட்டமிழந்தனர். ஆனால் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். சுப்மன் கில் 119 மற்றும் ரிஷப் பந்த் 109 ரன்கள் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டிய நிலையில் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த 632 நாட்களுக்கு பின் முதல் முறையாக வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் ரசிகர்கள் ரிஷப் பண்ட் பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்ப 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தனது ஸ்டைலில் அதிரடியாக விளையாடி சதத்தை விளாசி இருக்கிறார்.

ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய வந்தாலே, டவுன் தி ட்ராக் வந்து பவுலரின் தலைக்கு மேல் சிக்சர் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அரைசதத்தை 88 பந்துகளில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த 36 பந்துகளில் சதத்தை எட்டி அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

இந்நிலையில் இந்திய அணிக்காக தமக்கு பிடித்த சென்னையில் சதமடித்து கம்பேக் கொடுத்தது ஸ்பெஷல் என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார். மேலும் 2-வது இன்னிங்ஸில் 30-3 என இந்தியா தடுமாறிய போது சுப்மன் கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததும் ஸ்பெஷல் என தெரிவித்தார். இது பற்றி ரிஷப் பண்ட் பேசுகையில், “இந்த சதம் ஸ்பெஷல். ஏனெனில் நான் சென்னையில் விளையாடுவதை விரும்புகிறேன்” “காயத்திற்கு பின் நான் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன்.

இது டெஸ்ட் ஃபார்மட்டில் காயத்திலிருந்து வந்த பின் அடித்த முதல் சதமாகும். அதை உணர்வுபூர்வமாக கொண்டாடினேன். ஒவ்வொரு போட்டியிலும் இப்படி ரன்கள் குவிக்க விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி. மீண்டும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தது உணர்வுபூர்வமாக இருந்தது” என தெரிவித்தார்.

India vs Bangladesh: கொஞ்சம் சேட்டைகார பையன் சார் இவன் .. வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட்!

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது, வங்கதேச அணிக்காக ஃபீல்டிங் செட் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரணி வீரர்களுடன் ஜாலியாக உரையாடிய அவர், அப்படியே ஃபீல்டிங் செய்து ஆலோசனை கொடுத்துள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த 632 நாட்களுக்கு பின் முதல் முறையாக வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் ரசிகர்கள் ரிஷப் பண்ட் பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். அதற்கு ஏற்ப 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தனது ஸ்டைலில் அதிரடியாக விளையாடி சதத்தை விளாசி இருக்கிறார்.

ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய வந்தாலே, டவுன் தி ட்ராக் வந்து பவுலரின் தலைக்கு மேல் சிக்சர் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அரைசதத்தை 88 பந்துகளில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த 36 பந்துகளில் சதத்தை எட்டி அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 129 பந்துகளில் 4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை அளித்தனர். இதனிடையே பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் செய்த சம்பவம் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனிடையே ட்ரிங்ஸ் பிரேக்கிற்கு பின் வங்கதேசம் அணியின் கேப்டன் ஷான்டோ ஃபீல்டிங்கை செட் செய்து கொண்டிருந்தார். அப்போது கவர்ஸ் திசையில் எந்த ஃபீல்டரும் இல்லாமல் இருப்பதை கவனித்த ரிஷப் பண்ட், உடனடியாக வங்கதேசம் கேப்டன் ஷான்டோவை “பையா” என்று அழைத்து இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்க.. ஒரு ஃபீல்டரை நிறுத்தலாம் என அறியுரை கூறினார்.

இதனை சிரித்து கொண்டே ஏற்றுக் கொண்ட ஷான்டோ உடனடியாக ஒரு ஃபீல்டரை கவர்ஸ் திசையில் நிறுத்தினார். இது போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. எதிரணி கேப்டனுக்கு கூட ரிஷப் பண்ட் ஆலோசனை வழங்குகிறார் என்று ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ICC T 20 World Cup: இலங்கை அணி வெற்றி பெற172 ரன்கள் நிர்ணயித்தது வங்காளதேசம்

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி தலைவர் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்து வீசசை நிதானமாக விளையாடினர். லஹிரு குமாரா 5.5 ஓவரில் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார்.

சாமிக்க கருணாரத்னே 7.4 ஓவரில் ஷகிப் அல் ஹசன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹிம், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முகமது நைம் 50 ரன்களை கடந்து விளையாடினர். பினுரா பெர்னாண்டோ 16.1 ஓவரில் முகமது நைம் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி தலைவர் மஹ்முதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி 171 ரன்கள் எடுத்தது.