ராகுல் காந்தி வேதனை: எய்ம்ஸ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபாதைகளில் தூங்கும் நோயாளிகள்..!

எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் உறையும் குளிரில் நடைபாதைகளில் தூங்கும் நிலை உள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அண்மைக் காலமாக காய்கறி விற்பனையாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுடன் உரையாடிய வீடியோ பதிவையும் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள சாலைகள், நடைபாதைகள், சுரங்கப்பாதைகளில் படுத்திருந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

பின்னர் இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். உறைய வைக்கும் குளிரில் நடைபாதைகளில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது.

சுரங்கப்பாதைகளில் படுத்து தூங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதுதான் இன்றைய டெல்லி எய்ம்ஸின் உண்மை நிலை. இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறார். மத்திய மற்றும் டெல்லி அரசுகள் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நின்ற இராணுவ வீரரின் துடிப்புகளை 2 மணி நேரம் போராடி உயிர்ப்பித்த AIIMS மருத்துவர்கள்..!

இராணுவ வீரர் ஒருவர் மூச்சின்றி இருந்த நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீண்டும் உயிர்ப்பித்து AIIMS மருத்துவர்கள் சாதனைக்கு நாடெங்கும் குவியும் பாராட்டுக்கள். ஒடிசா மாநிலம் நாயகர் பகுதியில் அமைந்துள்ள ஒடபாலா என்ற கிராமத்தில் வசித்து வரும் இராணுவ வீரர் சுபகந்த் சாஹு. இவருக்கு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் முதலில் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கைவிரித்தால் ஒடிசாவின், புவனேஸ்வர் AIIMS மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்துடிப்பு செயலிழந்ததை கண்டறிந்தனர். அப்போது மருத்துவர்கள் இராணுவ வீரர் இறந்துவிட்டார் என அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிப்பதற்கு முன்பு eCPR முறையில் முயற்சித்துப் பார்ப்போம் என்ற முயற்சியில் எக்ஸ்ட்ரா கார்போரல் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் எனப்படும் eCPR முறையில் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

தொடர்ந்து 40 நிமிடம் அளித்த சிகிச்சையில் 2 மணி நேரம் துடிப்பே இல்லாமல் இருந்த அவரது இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. இதனையடுத்து சுபகந்த் சாஹு இதய துடிப்பு 96 மணி நேரத்தில், சீரானது. இது மருத்துவத்தில் ஒரு மைல்கல். அதாவது நோயாளியின் இதயம் துடிப்பு நின்று, 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆகையால், மூச்சின்றி இருந்த இராணுவ வீரரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீண்டும் உயிர்ப்பித்து சாதனை புரிந்துள்ள AIIMS மருத்துவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்த வண்ணமுள்ளது.