ஐபில்: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் சுற்று கனவை தகர்த்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

அபுதாபியில் உள்ள சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று என்ற நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அதேபோல ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இவரும் போட்டி தொடக்கம் முதலே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீசசை நாலாபுறமும் சிதறடித்தனர். இதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் அணி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ரஷித் கான் 5.3 ஓவரில் ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 8.3 ஓவரில் ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார். உம்ரான் மாலிக் 9.1 ஓவரில் இஷான் கிஷன் 84 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 124 ரன்களுக்கு 3 வது விக்கெட்டுவை பறிகொடுத்தது. அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கீரான் பொல்லார்டுடன் ஜோடி சேர்த்தார்.

அபிஷேக் சர்மா 12.5 ஓவரில் கீரான் பொல்லார்ட் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் ஜேசன் ஹோல்டர் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் 64 ரன்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சுருட்டினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 54 ரன்கள் 5.2 ஓவரில் எடுத்திருந்த நிலையில் ட்ரென்ட் போல்ட் ஓவரில் ஜேசன் ராய் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றிக்கான கனவு தகர்ந்தது.

ஐபில்: 115 ரன்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சில் சுருட்டியது

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

டிம் சௌத்தி முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விருத்திமான் சாஹா ரன் ஏதுமில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்யுடன் ஜோடி சேர்த்தார். சிவம் மாவி 3.4 ஓவரில் ஜேசன் ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க்ம், கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார்.

ஷாகிப் அல் ஹசன் 6.5 ஓவரில் கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏழாவது ஓவரிலேயே 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா, ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 10.1 ஓவரில் அபிஷேக் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார்.

ப்ரியம் கார்க்ம் 21 ரன்களுக்கும் அப்துல் சமத் 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, டிம் சௌத்தி மற்றும் சிவம் மாவி தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிரடியில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

துபாய் சர்வதேச மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

புவனேஷ்வர் குமார் 1.1 ஓவரில் எவின் லிவிஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். சந்தீப் சர்மா 8. 4 ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். லியாம் லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் நடையை கட்டினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மஹிபால் லோமோர், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் ஐதராபாத் அணி பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளையும்,. சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 57 ரன்கள் எடுத்த நிலையில் மஹிபால் லோமோர் 5.1 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்வுடன் ஜோடி சேர்த்தார். விருத்திமான் சாஹாவுடன் இணைந்து அதிரடியாக விளையாட ஜேசன் ராய் மீண்டும் கேன் வில்லியம்சன் சேர்ந்து அதிரடி காட்டினார்.

பனிரெண்டாவது ஓவரின் கடைசி பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய் சேத்தன் சகாரியாயிடம் சரணடைந்தார். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க் வந்த வேகத்தில் நடையை கட்ட அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சனுடன் சேர்த்தார். இறுதியில் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.