யாருனு நெனச்ச தோனியின் ரீப்ளேஸ்மென்ட் .. 34 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்..!

துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்ஸ் ரிஷப் பண்ட் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலை கார் விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், சுமார் 18 மாதங்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தார். ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அதில் இந்திய அணியின் எதிர்பார்ப்பை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்தார்.

இருந்தாலும் ரிஷப் பண்ட்-டம் இருந்து எதிர்பார்த்த அளவிற்கான பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் சொதப்பிய ரிஷப் பண்ட், டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் சொதப்பினார். இந்நிலையில் இந்திய அணிக்கான ஹோம் சீசன் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக, இந்திய அணியின் அனைத்து வீரர்களையும் துலீப் டிராபியில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்களை தவிர அனைவரும் துலீப் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் ரிஷப் பண்ட் இந்தியா பி அணியில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்தியா ஏ – இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், எந்த பவுலராக இருந்தாலும் பவுண்டரியை விளாசி கொண்டே இருந்தார். அதேபோல் குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். முதல்தர கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 20-வது அரைசதம் இதுவாகும். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 47 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதனால் ரிஷப் பண்ட் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் பார்க்கப்படுகிறது.

IND vs SA: சச்சின் டெண்டுல்கர் 25 ஆண்டுகள் சாதனையை நாளை ரிஷப் பண்ட் முறியடித்து… தொடரை சமன் செய்வர்..!

இந்தியக் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 16 வயதில் தொடங்கினார். எத்தனையோ நிகழ்த்தியுள்ளார். அவரது ஒரு சில சாதனைகளை விராட் கோலி போன்ற வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.

ரிஷப் பந்த் தனது 16 வயதில் முதல் தர போட்டிகளில் அறிமுகமாகி 2016 -ம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் துணை கேப்டானாக இருந்து 18 பந்துகளில் 50 ரன்கள் சாதனையைப் படைத்தார். மேலும் அதே நாளில் 100 ரன்கள் அடித்து இந்திய அணி அரையிறுதிக்கு அழைத்து சென்றார். ரஞ்சி கிரிக்கெட்டில் இளம் வயதில் முச்சதம், அதிவேக சதம் போன்ற சாதனைகளை படைத்த ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 9 – ந், தேதி டில்லி அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் தோல்வி, ஜூன் 12 – ந் தேதி கட்டாக்கிலுள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்திருத்தத்தால் மீண்டும் ஒரு தோல்வி என 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது .

ஆகையால் ஜூன் 14 – ந், தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் மூன்றாவது முறையாக டாஸ் தோற்க இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலையில் 179 ரன்கள் எடுக்க அதன்பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க 48 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்து போட்டியை 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில் நாளை ராஜ்கோட் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சிக்சர் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது மட்டுமின்றி இந்திய, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி போட்டியை சமன் செய்யும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை என ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் உள்ளனர்.

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்தார். அவர் தனது 25-வது வயதில் படைத்திருந்த சாதனையை, 25 ஆண்டுகளாக யாராலும் தொட முடியாமல் உள்ளது. ஆனால், ரிஷப் பண்ட் 24 வயது 251 நாட்களே ஆன தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 99 சிக்சர்களை விளாசி இருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டன்ஷி அழுத்தம் காரணமாக பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் நாளைய ஆட்டத்தில் அவர் ஒரு சிக்சர் அடித்தால் , சச்சினின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார்.