அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் சாதனைகளுடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின்..!

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சின் தொடக்க வீரர்களாக தேஜ்னரைன் சந்திர்பால் , கேப்டன் கிரைக் பிராத்வெயிட் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் இருக்கையில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 12.5 ஓவரில் கேப்டன் கிரைக் பிராத்வெயிட் 44 பந்துகள் சந்தித்து 12 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாக்கி ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரர் தேஜ்னரைன் சந்திர்பால் 46 பந்துகள் சந்தித்து 20 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 16.3 ஓவரில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ரன்களுக்கு 2 தொடக்க வீரர்களையும் இழந்து தடுமாறிய நிலையில், தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய சுழலை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமிருக்க ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 பந்துகள் சந்தித்து 40 ரன்களும், ரோஹித் சர்மா 65 பந்துகள் சந்தித்து 30 ரன்களும் எடுத்து 23 ஓவர்கள் முடிவில் 80 ரன்களும் முதல் நாள் ஆட்ட முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட், ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதில் ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 விக்கெட் வீழ்த்தி 3-வது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையில் இணைந்துள்ளார்.

சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் 1347 விக்கெட்டுக்களுடன் முதலிடத்திலும் சேன் வார்ன் 1001 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 975 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் , அணில் கும்ப்ளே 956 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.