புலவர்களுக்கு சண்டையும் சச்சரவும் சகஜம் என்பதுபோல கிரிக்கெட் விளையாட்டில் எதிரணி வீரர்களை கேலியும் கிண்டலும் செய்வது கடந்த காலங்களில் இயற்கையான விஷயமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணி எதிரணியை கேலியும் கிண்டலும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா அணி கேலி மற்றும் கிண்டலுக்கு பதிலடி கொடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி. அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா போன்று ஸ்லெட்ஜிங் செய்யும் அணிகளை அவ்வளவு எளிதில் முன்னாள் இந்திய அணியின் தலைவர் வீராட் கோலி விட மாட்டார்.
அவரும் பதிலுக்கு அதிரடியாக பேட்டியில் மட்டுமின்றி வாயிலிலும் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர். மேலும் மைதானத்திற்கு வெளியே வீராட் கோலி கலாய்த்தல் வீராட் கோலியும் அவரின் ரசிர்கர்களும் எதிரணி வீரர்களை அவர்களின் பணியிலேயே வெறுப்பேற்றுவார்.., ஆக்ரோஷமாக பேசுவார்.. அதேபோல் மைதானத்திலேயே டான்ஸ் ஆடுவது, ஜாலியாக காமெடி செய்வது, இங்கும் அங்கும் ஆட்டம் போடுவது என்று குஷியாகி இருந்து ரசிகர்களை சந்தோசப் படுத்துவார்.
இப்படிப்பட்ட வீராட் கோலிக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது மிகவும் சாந்தமான அன்பான முகம். கிரிக்கெட் மைதானத்திலேயே குறும்பு செய்யும் முகம். சமயங்களில் எதிரணி வீரர்களுடன் மிக அன்பாக இருக்கும் முகம். இந்திய அணியும், இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் வீரர்களுடன் மோதினால் கூட வீராட் கோலி மட்டும் சதாப் கான் உள்ளிட்ட வீரர்களுடன் மிக அன்பாக நட்பாக பழகுவார். இந்நிலையில் உலகக் கோப்பை 2023 அவர் நடந்து கொண்ட விதமும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் வீராட் கோலி கடுமையாக சண்டை போட்டனர். அதன்பின் சமூக வலைத்தளங்களில் கூட நவீன் உல் ஹக் கோலியை கிண்டல் செய்யும் விதமாக போஸ்ட் போட்டார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உலகக் கோப்பை 2023 இந்திய – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் ஆட வந்த நவீன் உல் ஹக்கை கட்டியணைத்து வீராட் கோலி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வீராட் கோலியின் இந்த சம்பவம் வீராட் கோலி யார் என்பதை உலக கிரிக்கெட் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.