தமிழகத்தில் சுங்கச் சாவடிகள் எண்ணிக்கை 70 ஆக உயர்வு மேலும் 3 இடங்களில் சுங்கச் சாவடிகள்..!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணங்கள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படும். அந்தவகையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரலில் உயர்த்தப்பட வேண்டிய கட்டணம் ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது.இந்தச் சூழலில், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின்

எண்ணிக்கையை 67-ல் இருந்து 70 ஆக இந்திய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பும், கட்டண விவரமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டண விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது .

புதிதாக திறக்கப்பட உள்ள நங்கிலி கொண்டான் சுங்கச்சாவடியில், ஒருமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை செல்வதற்கு ரூ.55 முதல் ரூ.370 வரையும், ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், நாகம்பட்டி சுங்கச்சாவடியில் ஒருமுறை செல்ல ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.90 முதல் ரூ.600 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வணிக உபயோகமில்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.340 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்தும் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை திறக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓ. பன்னீர்செல்வம்: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை வீதிகளுக்கேற்ப குறையுங்கள்..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையில், தமிழ்நாட்டில் வாழும் பொதுமக்கள் ஏற்கெனவே பல வரிகளால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கிள்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை 01-09-2024 முதல் உயர்த்த இருப்பதாக வந்துள்ள செய்தி போதிச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, சுங்கக் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் போவையில் கொண்டு வரப்பட்ட ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள், 2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 15 அங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்றும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூன்றாண்டுகள் கழிந்தும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ, சுங்கக் கட்டணத்தை குறைக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, இன்று தமிழ்நாட்டில் 64 சுங்கச் சாவடிகள் இயங்கிக் கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் கட்டணமும் ஆண்டுக்காண்டு உயர்ந்த கொண்டே செய்கிறது. சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதன் நோக்கமே சாலை அமைப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்வதற்காகத்தான். இந்த இலக்கை எட்டிய பின், சாலை பராமரிப்புச் செலவிற்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இதன்படி பார்த்தால், கட்டணத்தை குறைப்பதுதான் முறையானது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்காண்டு உயர்த்துவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த ஆண்டைப் பொறுந்தவனாபில், மக்களவை தேர்தலுக்குப் பின் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 01-09-2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 17 சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும், இதன் விளைவாக 150 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு, சுற்றுலாப் பயணிகள் செல்லும் வாகனங்களின் கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், சரக்கு லாரிகளின் கட்டண உயர்வுக்கும் வழிவகுத்து அதன்மூலம் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும். மேலும், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணமும் உயரக்கூடும். சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒன்றுக்கொன்று பின்னிப் பினைணந்தது.

ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01-09-2024 முதல் உயர்த்தப்பட உள்ள சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை வீதிகளுக்கேற்ப குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.