அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்று இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.
கமலா ஹாரிஸ் பேசுகையில் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான்.
அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.