டவல் மூலம் மூச்சுத்திணறடிக்க வைத்து மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய்..!

மாணவர் சங்கமத்தில் மலர்ந்த கள்ளக்காதலால் பறிபோன உயிர்கள்..:

அந்த காலத்தில், கூட்டுக் குடும்பத்தில் அன்பு பெரிதாக இருக்க, சாகும் வரை இணை பிரியாத உறவு இருந்தது. பெண்கள் வயதுக்கு வந்தவுடனே திருமணம் செய்து வைத்தனர். என்று பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்களோ அன்று இருந்து, கள்ள உறவுகள் ஆரம்பித்தன என்று சொல்லும் அளவிற்கு கள்ளக்காதல் பெருகியுள்ளது. மேலும் ஸ்மார்ட் போன்கள் மக்கள் கைகளில் வரத்தொடங்கியதோ, அன்றே சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள் என பலர், காம வலைகளில் சிக்கி, தங்கள் குடும்ப வாழ்க்கையை சீரழித்து கொண்டுள்ளனர்.

இப்படி நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளையும் பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்லும் சம்பவமும், கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொல்லும் சம்பவமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஆந்திராவிலுள்ள சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் அமீன்பூர் என்ற இடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ரஞ்சிதாவிற்கு சென்னையா என்பவருடன் திருமணமாகி சாய்கிருஷ்ணா, மதுபிரியா, கெளதம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ரஞ்சிதாவுடன் பள்ளியில் படித்தவர்களின் சங்கமம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர். இதில் ரஞ்சிதாவிற்கு அவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சிவா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகத்தை தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர். இது நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் தாண்டிய தொடர்பை ஏற்படுத்தியது.

அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதில் ரஞ்சிதா சிவாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவன் இருப்பதால் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும், அவர்கள் இல்லாவிட்டால் உன்னை திருமணம் செய்வது குறித்து பரிசீலிப்பேன் என்று சிவா தெரிவித்தார்.

இதனால் சிவாவை திருமணம் செய்ய தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட ரஞ்சிதா திட்டமிட்டார். கணவன் சென்னையா இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அதனை பயன்படுத்தி மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய ரஞ்சிதா திட்டமிட்டார். இது குறித்து சிவாவை தொடர்பு கொண்டு பேசியபோது தாமதிக்காமல் உடனே குழந்தைகளை கொலை செய்துவிடும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஞ்சிதா முதலில் தனது மூத்த மகன் சாய் கிருஷ்ணாவை டவல் ஒன்றால் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சுத்திணறடித்து கொலை செய்தார்.

அதனை தொடர்ந்து அதே முறையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மூச்சுத்திணறடித்து கொலை செய்தார். காலையில் வேலைக்கு சென்ற கணவன் வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்டதால் மயங்கிவிட்டதாக தெரிவித்தார். அதோடு தனக்கும் வயிறு சரியில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு 4 பேரையும் சென்னையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது மூன்று குழந்தைகளும் ஏற்கனவே இறந்திருந்தனர்.

மேலும் குழந்தைகளை சோதித்த போது அவர்களது உடம்பில் எந்தவித விஷமும் கலந்திருக்கவில்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் தாய் ரஞ்சிதாவின் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு ரகுழந்தைகளின் தாய் ரஞ்சிதாவின் விசாரிக்க தொடங்கினர். இந்த விசாரணையில் அவரது கள்ளக் காதலனை திருமணம் செய்ய குழந்தைகள் தடையாக இருப்பதாக கருதி அவர்களை கொன்றதாக ஒப்புக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.