ICC T 20 World Cup : இந்த படை வெல்லுமா…!? நாளைய சரித்திரம் சொல்லுமா…!?

2007-ம் ஆண்டு முதல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கடைசியாக 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்ற நிலையில் 2018- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரை ஐசிசி கைவிடுவதாக அறிவித்த நிலையில் 2020- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைதத்து மட்டுமின்றி 7-வது T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலின் 3-வது அலை வரலாம் என்ற அச்சத்தால் T 20 உலக கோப்பை கிரிக்கெட் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றது.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்.

2007-ம் ஆண்டு மகேந்திரசிங் தோனி தலைமையில் உலக கோப்பைக்கு வென்ற இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.