IPL -2025: KL. ராகுல் “ஆக்ரோஷமாக” செய்ததை “நக்கலாக” செய்து காட்டிய விராட் கோலி..!

“இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என “ஆக்ரோஷமாக” KL. ராகுல் செய்ததை “நக்கலாக” விராட் கோலி செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. IPL -2025 தொடரின் 24-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த KL. ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சேசிங்கை முடித்து வைத்தார். அந்த வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும், அவர் ‘இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்து காட்டினார்.

அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இதேபோல பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதோபோலவே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டிக்குப் பிறகு, KL. ராகுல் “இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்தது போலவே, விராட் கோலியும் அவர் முன் “நக்கலாக” அதே சைகையை செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.