IPL 2025: 17 பந்துகளில் அரைசதம்..! 35 பந்துகளில் சதம் அடித்து இமாலய சாதனை படைத்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார். IPL -2025 தொடரின் 47-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலப்பரீட்சை நடத்த வருகின்றன.ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜாஸ் பட்லர் சுப்மன் கிலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுப்மன் கில் 29 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் அடித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி 16. 4 ஓவரில் 167 ரன்கள் எடுத்திருந்த போது மொரவக்ககே மகேசு தீக்சனவின் பந்து வீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழக்க ஜாஸ் பட்லருடன் டெவாட்டியா ஜோடி சேர 20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்களாக 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் ரேட் கிட்டத்தட்ட இருந்தது.  மேலும் அதிரடியாக விளையாடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடித்து சதம் அடித்து இமாலய சாதனை படைத்தார்.