15-வது ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்று சுற்றிற்கு தகுதி பெறாத நிலையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
15-வது ஐபிஎல் திருவிழா கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி முதல் தொடங்க மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம் மற்றும் டிஒய் பாட்டீல் மைதானங்களில் 55 போட்டிகளும் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மீதமுள்ள 15 போட்டிகள் என ஆக மொத்தம் 74 போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
குரூப்-2 ல் கலந்து கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் போட்டியில் மார்ச் 28–ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஏப்ரல் 2– ந் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 8– ந் தேதி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தியது.
இதையடுத்து ஏப்ரல் 11– ந் தேதி நடைபெற்ற நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், ஏப்ரல் 14– ந் தேதி நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 17– ந் தேதி நடைபெற்ற ஆறாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும், ஏப்ரல் 23– ந் தேதி நடைபெற்ற ஏழாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 27– ந் தேதி நடைபெற்ற எட்டாவது போட்டியில் லீக் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தோல்வி அடைந்ததை பழிதீர்க்கும் விதமாக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மேலும் ஐபில் லீக் போட்டியில் 14 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து கொண்டது. அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடிய 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஆகையால் ப்ளே ஆஃப் சுற்றில், லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் லீக் சுற்றில் ஏற்கனவே இரண்டு முறை விளையாடிய குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தல ஒரு முறை வெற்றி பெற்றிருந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றில் வெற்றி பெரும் அணி நேரடி இறுதி சுற்றிற்கு தகுதி பெரும் என்பதால் இந்த போட்டி மிகவும் பரபரப்பு ஆனது. மே 24– ந் தேதி நடைபெற்ற சான்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரிட்சையில் இறங்கியது.
அப்போது டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பில்டிங் தேர்வு செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுக்க 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 பந்துகள் மீதம் இருக்கையில் 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஆனால் மே 27 -ந் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத தயாரானது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்க 3.6 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது 22 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க அதனைத்தொடர்ந்து சான்சு சாம்சன் 14 ரன்கள் மற்றும் ஜோஸ் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுக்க 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதாவது முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.