உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி தலைவர் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து வங்காளதேசம் அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்து வீசசை நிதானமாக விளையாடினர். லஹிரு குமாரா 5.5 ஓவரில் லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார். சாமிக்க கருணாரத்னே 7.4 ஓவரில் ஷகிப் அல் ஹசன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹிம், முகமது நைமுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முகமது நைம் 50 ரன்களை கடந்து விளையாடினர். பினுரா பெர்னாண்டோ 16.1 ஓவரில் முகமது நைம் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி தலைவர் மஹ்முதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்கள் எடுத்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா மற்றும் பதும் நிசாங்கா களமிறங்கினர். ஆனால் நசும் அகமது முதல் ஓவரின் நான்காவது பந்தில் குசல் பெரேரா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா மற்றும் பதும் நிசாங்காவுடன் ஜோடி சேர்ந்து விளையாட ஷகிப் அல் ஹசன் 8.1 ஓவரில் பதும் நிசாங்கா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ(0), வனிந்து ஹசரங்கா (6) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பானுக ராஜபக்ச, சரித் அசலங்காவுடன் ஜோடி சேர்ந்து வங்காளதேச அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கடைசியில் இலங்கை அணி 18.5 ஓவரில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.