ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் “ஜி-7” நாடுகள் வழங்கும்

ஜெர்மனி, ஜப்பான், கனடா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் உச்சி மாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே ஓட்டலில் நேற்று தொடங்கியது. முன்னதாக உலக மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுமாறு உலகத்தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி நேற்று போரிஸ் ஜான்சன் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உலகின் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கோவிட் -19 தடுப்பூசியை வழங்குவதற்கான அறிவிப்பை உலகத்தலைவர்கள் வெளியிடுவார்கள். டோஸ் பகிர்வு, நிதி உதவி அளித்தல் வாயிலாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் பலனாக எங்களது உபரி தடுப்பூசிகளில் கொஞ்சத்தை தேவைப்படுகிறவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அவ்வாறு செயல்படுகிறபோது, ஒரு தொற்றுநோயை தோற்கடிப்பதற்கு ஒரு பெரிய உதவி நடவடிக்கையாக இது அமையும் என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதால் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், கோவிட் -19 பரவல் குறைந்து வரும் நிலையில் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனிதநேயம் இன்னும் மரித்துப் போய்விடவில்லை என்பதை உணர்த்தும் சம்பவம்

அசாம் மாநிலம் ராஹா மாவட்டத்தைச் சேர்ந்த நிஹாரிகா சூரஜ் தம்பதியினர். சூரஜின் தந்தை துலேஸ்வர் தாஸும் மகனுடம் வசித்துவருகிறார். அண்மையில், சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது, துலேஸ்வர் தாஸுக்கு உடல்நிலை குன்றியுள்ளது. பரிசோதனையில் அவருக்குக் கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.


வீட்டிலிருந்த அவருக்கு மருத்துவ சிகிச்சையின் தேவை ஏற்பட்டது. உடனடியாக எதற்காகவும் காத்திருக்காது மருமகள் நிஹாரிகா தனது மாமனாரை முதுகில் சுமந்தவாறு ராஹா மருத்துவ மையத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், வயது முதிர்ந்த மாமனாரை தனியேவிட முடியாது எனக் கூறி நிஹாரிகா தனக்கும் மருத்துவமனையில் இடம் கோரினார். பின்னர், மருத்துவர் சங்கீதா தர், செவிலியர் பிண்டு ஹீரா இணைந்து அவர்களை நகாவோ போகேஷ்வரி புக்கனானி சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உலக சுகாதார அமைப்பு கவலை

உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கோவிட -19 தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.


உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீதத்துக்கு அதிகமான மக்களுக்கு கோவிட -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கோவிட -19 தடுப்பூசிகளில் 60 சதவீதம் அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்கொலையை லைவாக வெளியிட்ட நபர்

டெல்லியில் சைபர் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 12.50 மணியளவில் அமெரிக்காவில் செயல்பட கூடிய பேஸ்புக் அலுவலக முகவரியுடன் வந்த மெயிலில், டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் அவரை காப்பாற்றும்படியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின்னர் பேஸ்புக் கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு பாலம் வில்லேஜ் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான தகவல்கள் பகிரப்பட்டன.


இதனை தொடர்ந்து அவசரகால பொறுப்பு வாகனங்கள் உள்ளிட்டவை உடனடியாக காவல்துறை சம்பவ பகுதிக்கு புறப்பட்டன. இதன்பின் காவல்துறை அந்நபரின் இருப்பிடத்திற்கு சென்றபோது அவர் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர கொடுத்தனர். பின்பு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு பின்பு அந்த நபர் காப்பாற்றப்பட்டு உள்ளார்.

ஆபத்தான வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ்

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வியட்நாம், சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இப்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவிலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக செய்தி வெளியானது. இவ்வாறாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவருமான அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் மருத்துவ சங்கம் நடத்திய மாநாட்டில் பேசும் போது சீனாவில் உருவாகும் ஒரு ஆபத்தான தொற்றுநோய் உலகையே அச்சுறுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நோய் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் 6 மாதத்தில் சுமார் 3 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகள் போருக்கு தயாராவது போல், தொற்று நோய் ஆபத்திற்கு தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

எந்த ஒரு சிறிய ஆய்வகத்தில் வைத்தும் ஆபத்தான நோய் கிருமியை உருவாக்கி விட முடியும். உலகின் எந்த நாட்டுக்கும் சில மணி நேரங்களில் நம்மால் பயணம் செய்ய முடியும் போது, இது போன்ற ஆபத்தான நோய்களும் எளிதில் பரவி விடும் என்று ஆபத்தான வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கோவிட்-19 பாதிப்புக்கு ஒரே நாளில் 242 பேர் பலி

சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த கோவிட்-19 தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொடிய கோவிட்-19 பாதிப்பால் சீனாவில் மட்டும் 1,110 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி,, சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,500 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒரே நாளில் 242 பேர் பலியான நிலையில், கோவிட்-19 பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350- ஐ கடந்துள்ளது. இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்: கோவிட்-19 என அழைக்கப்படும்

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 1,110 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி,, சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,500 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, கொரோனா வைரசிற்கு கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சீனா: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 1,110 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,500 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 564 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 564 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,500 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.