சீனாவின் நீருக்கடியில் சென்று தாக்கும் அதிநவீன போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கல்

சீனா, பாகிஸ்தான் இடையே 2017 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது, அதன்படி, சீனாவின் ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் வடிவமைத்துள்ள 054 A போர்க்கப்பல் “உலகத் தரம் வாய்ந்த நீருக்கடியில் சென்று தாக்கும் திறன்” கொண்டவை அகும். இதனை சீனா து. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் இந்த போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

 

விண்வெளியில் நடைபயணம்: சாதனை படைத்த முதல் பெண்

சீனா விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. அந்த விண்வெளி நிலையம் 2022-ம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா மிகுந்த தீவிரம் காட்டிவருகிறது. இதனைத்தொடர்ந்து ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்தின் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாய் ஜிகாங், யே குவாங்பு ஆகிய இரு விண்வெளி வீரர்களுடன் வாங் யாப்பிங் என்கிற வீராங்கனையையும் சீனா கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது.

இந்நிலையில் ‘தியான்ஹே’ விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங்குடன் இணைந்து வீராங்கனை வாங் யாப்பிங் விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்டார். இருவரும் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்த சுமார் 6½ மணி நேரம் விண்வெளி நடை பயணத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட முதல் சீன பெண் வாங் யாப்பிங் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டம்

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்தது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனது மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.

‘பேஸ்புக்’ இனி வரும் காலங்களில் “மெட்டா” என பெயர் மாற்றம்

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில், ‘பேஸ்புக்’கின் புதிதாக பெயர் “மெட்டா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

2.16 லட்சம் சிறுவர்களுக்கு பிரான்சில் 70 ஆண்டுகளில் பாதிரியார்களால் பாலியல் தொல்லை

கடந்த 2018-ம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலய பாதிரியர்கள் பலர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி பல நாடுகளில் பாதிரியர்களுக்கு எதிராக பாலியல் வழக்குகளும் தொடரப்பட்டன.

இதை தொடர்ந்து பிரான்ஸ் அரசு சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து 2½ ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி 2,500-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட முழு அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. இந்த குழு பிரான்ஷில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் பாதிரியார்கள் மற்றும் தேவாலய ஊழியர்களால் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரித்தது.

அந்த அறிக்கையில் பெரும்பாலனோர் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இவர்களில் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் டேங்கர் லாரி ஓடுனர்கள் தட்டுப்பாடு: ராணுவத்தின் உதவியை நாடும் இங்கிலாந்து

இங்கிலாந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாற்பது ஆண்டுகளாக பொருளாதாரம், அரசியல், சட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்திருந்த ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகியது. இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்த ஐரோப்பிய ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகியதன் காரணமாக பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டேங்கர் லாரி ஓடுனர்களை இங்கிலாந்தில் பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பிறநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான டேங்கர் லாரி ஓடுனர்கள் இங்கிலாந்து திரும்பவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் சுமார் 1 லட்சம் டேங்கர் லாரி ஓடுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்வது தடைபட்டு, அங்கு பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன நிலையில் பெட்ரோல் தீர்த்து ஒவ்வொரு பெட்ரோல் நிலையமாக மூடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்ல ராணுவத்தின் உதவியை நாட இங்கிலாந்து முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடையா?

கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றதை அடுத்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இந்நிலையில் தலீபான்களுக்கு பயந்து அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.இந்நிலையில் புதிய ஆட்சி அமைத்துள்ள தலீபான்கள் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்து உள்ளனர்.

தற்போது முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலீபான் அமைப்பு முடிதிருத்தும் கலைஞர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

23-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் கூகுள்

கி.பி முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்பட்டாலும், உணர்த்திகளை பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றி,சூசு Z3 1941 இல் உலகின் முதல் நிரலாக்கக் கணினி செய்து முடிக்கப்பட்டது. அதன் அதீத வளர்ச்சி உலகெங்கும் தகவல் தொழில்நுட்பம் புரட்சியால் இன்று அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

யாகூ தேடல் தேதி1995 மார்ச் 2 தொடங்கப்பட்டாலும் யாகூ தேடலுக்கு உருவான காலத்தில் கூகுள் கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

இணையதளத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலிக்கும் நிறுவனம் . தேடுபொறியில் தொடங்கி, மென்பொருள்கள், ஆன்லைன் விளம்பரம், வன்பொருள்கள் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

இந்நிலையில், கூகுளின் பிறந்த நாளையொட்டி சிறப்பிக்கும் விதமாக கூகுளின் உருவாக்கம், கூகுள் செய்யும் வே‌லைகள், செயல்பாடுகளை கார்ட்டூன் மூலம் விளக்கும் விதத்தில் சிறப்பு கூகுள் டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

பிரேசில் அதிபர் உணவு விடுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ளார். ஜெய்ர் போல்சனேரோ தன் சக அமைச்சர்களுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது அங்கு பாதுகாவலில் இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு ஜெய்ர் போல்சனேரோ தடுப்பூசி இன்னும் செலுத்திக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஜெய்ர் போல்சனேரோ சாலையோர உணவகத்தில் உணவருந்தும் நிலை ஏற்பட்டது.

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிதாக நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பு

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்து படாதபாடு படுத்தி வரும் கொரோனா வைரஸ். உலகில் வாழும் ஏழை எளிய நடுத்தர மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வாட்டி வதைத்து வருகின்றது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பினால் தடுமாறி வரும் நிலையில், ஆல்பா, பீட்டா, கப்பா என பலவகையில் உருமாறி பரவி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா அதாவது கோவிஷீல்ட் உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் பைஸர், சிங்கிள் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமின்றி மாடர்னா, சினோபார்ம், ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் தடுப்பூசிகள் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த படுகின்றன.

அஸ்ட்ராஜெனகா அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படும் அரிய வகை நோய் பாதிப்பானது நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. மிகவும் அரிதாக நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.