நாசா எச்சரிக்கை: 610 அடி உயரம்..! மணிக்கு 41 ஆயிரம் கி.மீ வேகத்தில்..! பூமியை நோக்கி வரும் விண்கல்..!

610 அடி உயர பெரிய விண்கல் ஒன்று மணிக்கு 41 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த விண்கல் மட்டும் இன்றி மற்றொரு சிறிய விண்கல்லும் பூமியை நோக்கி பல லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கற்களின் பாதையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது.

அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும். பெரும்பாலான விண்கற்கள் வளிமண்டலத்தில் எரிந்து துகள்களாக போய்விடும் என்றாலும் அரிதாக சில விண்கற்கள் பூமி மீது விழுவதுண்டு. அவ்வப்போது பூமிக்கு நெருக்கமாக சில விண்கற்கள் வரும் போது அவை பூமி மீது விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பூமியை நோக்கி இரண்டு மிகப்பெரிய விண்கற்கள் வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 KH3 மற்றும் 2024 PK1 என்ற விண்கற்கள் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில், 2024 KH3 என்பது அளவில் மிகப்பெரியது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 41,125 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் இத விண்கல், 610 அடி உயரம் கொண்டது. எனவே, இந்த விண்கல் பூமியில் மோதினால் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தலாம்.

 

ஆனால், இந்த விண்கற்கள் பூமி மீது மோத வாய்ப்பு இல்லை எனவும் பூமிக்குக் எந்த அச்சுறுத்தலும் இன்றி கடந்து சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த விண்கல் மீண்டும் வரும் 2037 ஜூன் மாதம் பூமியை நோக்கி வர வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதேபோல், அளவில் மிகச்சிறிய 2024 PK1 என்ற விண்கல்லும் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் 6,460,000-கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. 110 அடி உயரம் கொண்ட இந்த விண்கல்லும் இன்றே பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த இரு விண்கற்களையும் நாசா மட்டும் இன்றி பிற விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். கடைசி நேரத்தில் விண்கல் தனது பாதையை மாற்ற வாய்ப்பு குறைவாக இருந்தாலும் இந்த விண்கல் செல்லும் பாதையை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகள் வரை நிகழாத அதிசய சூரிய கிரகணம்..! இந்தியாவில் இருந்து ஏன் பார்க்க முடியாது என்ன

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்த கிரகணத்தில் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்குm கிரகணம் ஆரம்பமாகும். இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், முழு கிரகணமாக 10.08 மணிக்கு வரும். பிறகு அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது.

இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் நம்மால் பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. இதேபோலான சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை நிகழாது என கூறப்படுகிறது.

செல்லத்துரை நற்குணம்: 1974க்கு முன்னர் இலங்கை தமிழ் மீனவர்கள் கன்னியாகுமரி நாகப்பட்டினம் வரை மீன் பிடித்தனர்…!

கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய கச்சத்தீவு விவகாரத்தை திடீரென பாஜக கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட காங்கிரஸ், திமுகதான் காரணம் என்கிறது பாஜக. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு திமுக, காங்கிரஸ் தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி பேசும் பாஜக, சீனா ஆக்கிரமிப்பு பற்றி பேசாதது ஏன் என்றும் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கச்சத்தீவு மீட்புக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குப்புசாமி அண்ணாமலைக்கு இலங்கை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்லத்துரை நற்குணம் கூறுகையில், குப்புசாமி அண்ணாமலைக்கு தற்போது தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்த நிலையில் தமிழக மீனவர்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் கபடத்துடன் தான் பேசுவது என்ன எனத் தெரியாமல் புலம்ப ஆரம்பித்தார்.

1974க்கு முன்னர் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கன்னியாகுமரி நாகப்பட்டினம் ஆகிய பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக அப்போதைய இந்திய அரசாங்கம் இலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மை கட்டுப்படுத்துவதற்காக வலிந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர் என தெரிவித்தார்.

அமெரிக்க தூதரக அதிகாரி கருத்து: காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது…! அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்..!

அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து பேசுகையில், ’நீதித்துறையின் சுதந்திரம், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்து இருந்தது. இதற்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வரவழைத்து இந்தியா நேற்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க தூதரக அதிகாரி மில்லரில்; காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும். நேர்மையான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

வட கொரியா காட்டம்: காசா ரத்தம் சிந்த இஸ்ரேல் காரணம்..!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே 5 வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரிய தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ரோடாங் சின்முன் வெளியிட்டுள்ள செய்தியில், “பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக சர்வதேச சமூகம் கருதுகிறது. சுதந்திரமான பாலஸ்தீன் நாட்டை அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது உலக மக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக 1,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போரை நிறுத்திக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளன. இந்த போர் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிலைபாடுகளுக்கு எதிராகவும் வடகொரியா கருத்து தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக சர்வதேச விவகாரங்கள் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வட கொரியா கண்டித்து இருக்கிறது. மேலும் சிரியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலின் காரணமாக அந்நாட்டில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், இதற்கு சிரியாவுக்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள விரோத சக்திகளே காரணம் என வட கொரிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலஸ்தீனின் பெரும்பகுதி நிலத்தை அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த இஸ்ரேல் எஞ்சி இருக்கும் காசா, ஜெருசலேன், மேற்கு கரை பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை 5000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது கடந்த சில நாட்களாக இடைவிடாத தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை வட கொரியா மிக வன்மையாக கண்டித்துள்ளது.

டிவி சேனல் விவாத மேடையில் “அடி, உதை, குத்து..

டிவி சேனல்கள் மாலை அல்லது இரவு நேரங்களில் இப்போதெல்லாம் தினசரி ஒரு தலைப்பில் அரசியல்வாதிகள், வல்லுநர்களை அழைத்து அனைத்து டிவி சேனல்களும் விவாதித்து வருகிறது. ஒரே நேரத்தில் பலர் கத்துவது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கவே செய்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேர் அப்சல் மார்வத் மற்றும் அங்கு இப்போது ஆளும் கட்சியாக உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியைச் சேர்ந்த அஃப்னானுல்லா கான் ஆகியோர் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது இம்ரான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்சல் மார்வத் திடீரென எழுந்து அஃப்னானுல்லா கானை ஓங்கி ஒரு அறை அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்னானுல்லா கானும் தாக்குதலில் இறங்கினார், இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். நிகழ்ச்சி நெறியாளர் அவர்கள் அமைதிப்படுத்த முயன்ற போதும் ஒன்றும் நடக்கவில்லை. இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் தாக்கிக் கொண்டது மட்டுமின்றி மிகவும் மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பயன்படுத்தினர். இந்த மோதல் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படாது.

இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் “காதலி வாடகைக்கு!”

தனிமையில் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து கேர்ள் பிரண்டை வாடகைக்கு விடும் பிஸ்னஸை ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கேர்ள் பிரண்ட் மட்டுமின்றி பாய் பிரண்டையும் கூட நாம் வாடகைக்கு எடுக்கலாமாம் காதல் குறித்தும் காதலிப்பது குறித்தும் இங்கே ஏகப்பட்ட கவிதைகளும் பாடல்களும் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் யாராவது ஒருவரைக் காதலித்து இருப்போம். அவர்களுடன் ஒரு பிணைப்பைக் கொண்டிருந்திருப்போம்.

ஆனால், இந்த பிணைப்பை நீண்ட கால கனெக்ஷனாக மாற்றுவது என்பது பலருக்கும் வராது. அதிலும் டெக்னாலஜி நிறைந்த இந்த நவீன உலகில் இது குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. வாடகைக்கு எடுக்கலாம்: பலரது காதலும் இங்கே தோல்வியில் முடிய இதுவே முக்கிய காரணமாகும். இதன் காரணமாகவே இப்போது பலரும் திருமணமாகாமலும் பெண் கிடைக்காமலும் இருந்து வருகின்றனர். நம்ம ஊரில் அரேஞ் மேரேஜ் முறையால் சிங்கிலாக சுற்றும் நபர்கள் குறைவாகவே உள்ளனர்.

இருப்பினும், வெளிநாடுகளில் இப்படி தனியாகச் சுற்றுபவர்கள் ரொம்பவே அதிகம். இந்த தனிமையால் இவர்களுக்கு மனஅழுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு நவீன தீர்வை கொடுக்கும் ஜப்பான் தான் இதற்கும் ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது. நமது நாட்டை விட அங்கே வயதானாலும் சிங்கிளாக சுற்றும் நபர்கள் ரொம்பவே அதிகம். இதற்குத் தீர்வாக ஜப்பான் மக்கள் தங்கள் பார்ட்னர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். காதலன், காதலி என யார் வேண்டும் என்றாலும் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை வாடகை எனச் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் ஒரு பிஸ்னஸா.. இதற்கு அந்நாட்டு அரசு தடை விதிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஜப்பான் மக்கள் அதிகப்படியானோர் சிங்கிளாக இருப்பதால் அவர்களுக்குத் தனிமை உணர்வு அதிகரித்து மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம். இதனால் விபரீத முடிவுகளையும் அவர்கள் எடுக்க நேரிடுகிறதாம். எனவே, அதைத் தடுக்க இந்தத் திட்டத்தை முன்மொழிந்ததே அரசின் குழு தானாம். எனவே, இது 100% அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்த திட்டம் தான்.

இதைக் கேட்டு உடனே குஷியாக வேண்டாம்.. இந்த சேவைக்கான கட்டணம் ஒன்றும் மலிவானது இல்லை.. காதலியை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.3000 என்ற விகிதத்தில் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுக்க வேண்டுமாம்.. இது தவிர கேர்ள் பிரண்டை தேர்வு செய்யத் தனியாக ரூ.1,200 கட்ட வேண்டுமாம். முதல் முறை இந்த சேவையைப் பயன்படுத்தும் போது இலவசமாக கேர்ள் பிரண்டை தேர்வு செய்யலாம். இருப்பினும், அதன் பிறகு தேர்வு செய்ய ரூ.1,200 கட்ட வேண்டும் என்பதே முக்கியமான விஷயம்.

அமெரிக்கா தான்: உக்ரைன் – ரஷ்யா போருக்கு காரணமா..!?

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்வு இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டி கொண்டுள்ளது. இதன்காரணமாக உலகெங்கும் ஆங்காங்கே மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இது மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளில் உணவு பொருட்கள் பற்றாக்குறை இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் உக்ரைனின் எல்லைகளில் படைகளை குவித்து கொண்டிருந்த ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை வானை கிழித்துக் கொண்டு  உக்ரைனின் தலைநகர் கீவ்-ஐ நோக்கி ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் சீறிப்பாய்ந்தன.

இந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வெளியான சற்று நேரத்திலேயே உக்ரைனின் மேற்கு, கிழக்குப் பகுதிகள் மற்றும் நட்பு நாடான பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் மும்முனை தாக்குதலை தொடங்கின. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்பார்த்திருந்த உக்ரைனும் பதிலடி கொடுக்க தொடங்கியது. அதுவரை உக்ரைனுக்கு  ஆதரவுக் குரல் தந்து கொண்டேயிருந்த நேட்டோ நாடுகளால், உக்ரைன் கைவிடப்பட்டு “ரஷ்யாவிற்கு எதிரான யுத்தத்தில் உக்ரைன் தனித்து விடப்பட்டது. நேட்டோ நாடுகளை நம்பி ஏமாந்த உக்ரைன் எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை” என்று புலம்ப உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆரம்பித்தார் .

உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றினாலும் இப்போதுவரை தலைநகரை ரஷ்ய படைகள் கைப்பற்றவிடாமல் உக்ரைன் போராடி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பல வீடியோ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியே  வெளியிட்டு அண்டை நாடுகளின் ஆதரவு மற்றும் நேட்டோ நாடுகளின் அனுதாபத்தை பெற்றதன் விளைவு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்  ரஷ்யாவின் மீது பொருளதார தடைகள் விதித்தது. மட்டுமல்லாது  சமூக வலைதளங்கள் தடை மற்றும் பல அந்நிய நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியது மட்டுமின்றி பணபரிவர்த்தனை முடக்கப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.இருந்த போதிலும், ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலமாக இந்த தீர்மானத்தை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போரின் மூலம் 1940 க்கு பிறகு வரலாற்றில் அழிக்க முடியாத இருண்ட பக்கங்களை ரஷ்யா எழுதுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் விமர்சித்தனர்.

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளால் எதுமே செய்ய முடியாத ஹிட்லர், ரஷ்யா நேச நாடுகளுடன் இணைந்து போரிட 1945 மே மாதம் ஜெர்மனியை சரணடைய செய்தது வரலாற்று பக்கங்கள் இன்னமும் மறக்கவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் வீழ்ந்தாலும் இவர்களுடைய அந்நிய நாட்டின் மீதுள்ள வணிக மோகம் இன்றும் தீரவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அணு ஆயுத பொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்கும் இவர்களுக்கு மற்ற நாடுகள் இந்த அணு ஆயுத உற்பத்தி செய்தால் அந்த நாடுகளை தனிமை படுத்தி பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொடுமை படுத்தி வருவது வழக்கமான ஒன்றாகும். ஈராக், ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் இவர்களுடன் சிக்கி சின்னாபின்னமாகி நிலையில் வட கொரியா இன்றும் மீண்டுவராதது நாடறிந்தது. இதுபோன்ற ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீண்டது ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா மட்டுமே என்பது  வரலாறு.

வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்ற ஒன்றை அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 12 நாடுகள், 1949-ல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கு மூலக்காரணம். இந்த போருக்கும் நேட்டோ நாடுகளுக்கும் என என்ன தொடர்பு என்பதை அலசி ஆராயலாம்.

இந்த நேட்டோ அமைப்பில் 12 நாடுகளைத் தவிர, ஜெர்மனி, அல்பேனியா, பெலாரஸ், போலந்து,  செக் குடியரசு உள்ளிட்ட 30 நாடுகள் இந்த நேட்டோவில் உறுப்பு நாடுகளாக உள்ளது. இந்த நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், நேட்டோவின் பிற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் அடிப்படையான விஷயம். இந்த அமைப்பின் ஒப்பந்தப்படி, உறுப்பு நாடுகள் மீது மற்ற நாடுகள் போர் தொடுத்தால், பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதே பிரதான கொள்கையாகும்.

ஆனால், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. மேலும் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்காக இருந்தது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின்  தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன. ஆனால்  உக்ரைன் 1994-ல் ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்பு, தன்னிடம் இருக்கின்ற அனைத்து அணு ஆயுதங்களையும் 1996-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.

மேலும் உக்ரைன், மேற்கில் ஐரோப்பிய நாடுகளுடனும், கிழக்கில் ரஷ்யாவுடனும் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது எனவே உக்ரைனில் மேற்கத்திய சார்பு மக்கள், கிழக்கில் ரஷ்யாவை விரும்பும் மக்கள் என இரு பிரிவுகளாக உள்ளனர். 2010 ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியேற்றபோது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்புக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தார். அதை எதிர்த்து ”யூரோமைடன்” என்ற பெயரில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் பொருளாதார நிலை மேம்படும் என மக்கள் கருதி ஐரோப்பாவுடனான நெருக்கமான உறவுகளை அவர்கள் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விரும்பினர்.

இந்நிலையில், ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து,  ரஷ்யப் பேரரசில் உக்ரைன் இணைந்ததன் 300-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், 1954-ல் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிதா குருஷேவ் கிரீமியாவை உக்ரைனுக்குப் பரிசாக வழங்கியதை கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனிலிருந்த கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகள் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இணைக்க கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், உக்ரைன் எல்லைகளில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. நேட்டோவில் உறுப்பு நாடாக தன்னை இணைத்துக்கொண்டால், எல்லையில் பிரச்சனை மற்றும் கிளர்ச்சியாளர்களைச் சமாளிக்க உதவும் என  உக்ரைன் அரசு நம்புகிறது. இதுமட்டுமின்றி தன் தாய் நாடான ரஷ்யா, அமெரிக்காவே பயப்படும் அளவிற்கு அதிக ராணுவ பலம் பொருந்திய நாடு . ஆகையால், ரஷ்யாவுடன் ஏதாவது பிரச்சனை என்றால் தன்னந்தனியாக எதிர்ப்பது முடியாத காரியம். இதனால், எப்படியாவது நேட்டோவில் தம்மை இணைத்து கொண்டால் நேட்டோ தமக்கு ஆதரவாக களமிறங்கும் என்ற யுத்தியை உக்ரைன் அரசு கையாளுகிறது.

இந்நிலையில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல்கள், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தோன்ற பூர்விக ரஷ்யர்கள் பெருமளவில் வாழும் கிரீமியாவில் கீவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக  ரஷ்ய ஆதரவாளர்கள் கிரீமியாவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும் விமான நிலையங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  2014-ல் ரஷ்ய அதிபர் புதின்  கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க அன்று முதல்  ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்றுவரை பனிப்போர் நடைபெற்று வருகின்றது.

மேலும் நோட்டோ நாடுகளில் உக்ரைனை சேர்த்து கொண்டால் உக்ரைனின் உள்ள நாட்டு பிரச்சனை காரணம் காட்டி நோட்டோ படைகளை ரஷ்யா எல்லைகளில் நிறுத்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் திட்டம் திட்டியது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ‘நோட்டோ’வுடன் உக்ரைன் சேர்வதற்கு ஊக்கமளித்தது ரஷ்ய அதிபர்  புதின்,  அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடனான காணோளிப் பேச்சுவார்த்தையின்போது, இந்த முயற்சிகள் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என தெரிவிக்க அதற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்தார். .

இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படை குவிப்புக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி விரைந்தனர். கூடுதலாகத் தனது நேசநாடான பெலாரஸில் அணு ஆயுதப் போர்ப் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுவந்தது. மேலும் உக்ரைன் மீது முப்படைகளின் மூலமும் முழுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்

சீன வெளியுறவு செய்தி தெடர்பாளர்: இந்திய சிறுவன் மாயமானது குறித்து எதுவும் தெரியாது

அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் சீன வெளியுறவு செய்தி தெடர்பாளர், ‘சீன ராணுவம் சட்டத்துக்கு உட்பட்டு எல்லைகளை கண்காணிக்கிறது. அத்துடன் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது. ஆனால் சிறுவன் மாயமான இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதன் முதலாக பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் இந்த பரிந்துரைக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவர் லாதிஃப் அப்ரிடி மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.