அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 20 காளைகளை அடக்கி காரை தட்டி தூக்கிய அபிசித்தர்..!

மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு துணை முதலமைச்சர் முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்க காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்ற பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்தார்.

13 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை அடக்கிய ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் பாகுபலி பெற்றது. முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிவரை கடும் போட்டிக்கு இடையே காரை தட்டி தூக்கிய பார்த்திபன்..!

மதுரை, பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த நூற்றுக்கணக்கான காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அதில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேட்டில் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 7.35 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் கிராமக் கமிட்டி சார்பில் 6 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன. போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்.

பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் களமிறங்கினர். அதில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. அடுத்து 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் துளசிராம் 2-ஆம் இடம் பிடித்து பைக் பரிசு பெற்றார். பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்து எலக்ட்ரிக் பைக் பெற்றார்.

சிறந்த காளையாக முதல்பரிசு பெற்ற சத்திரப்பட்டி தீபக்குக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. சின்னப்பட்டி கார்த்திக் 2-வது இடம் பெற்றார். இவருக்கு அலங்கை பொன் குமார் சார்பில் நாட்டின பசுவும், கன்றும் வழங்கப்பட்டன. 3-வது இடம் பிடித்த குருவித்துறை பவித்ரனுக்கு விவசாய வேளாண் கருவி வழங்கப்பட்டது.

ஆனால் இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராமுக்கும் இடையே முதலிடத்திற்கான கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி ஒரு சில சுற்றுகளில் பார்த்திபன் முதலிடம் பிடித்து காரை தட்டி தூக்கி சென்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டி தூக்கிய கார்த்தி..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி முதல் பரிசாக காரை தட்டி தூக்கிய மாடுபிடி வீரர் திருப்பரங்குன்றம் கார்த்தி. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின மதுரை மாநகராட்சி சார்பில் 51.18 லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்தையும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டன.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வழக்கமாக சுத்து வாடிவாசல் இல்லாமல் ரயில் தண்டவாள அமைப்பில் நீளமான வாடிவாசல் அமைக்கப்பட்டது. மேலும் வாடிவாசல் தொடங்கி மாடு சேகரிக்கும் இடம் வரை 1.8 கிமீ தூரத்திற்கு 8 அடி உயரத்தில் இரும்பு கிராதி கொண்டு இரு அடுக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள் பதியப்பட்டு அதில் 1100 காளைகள் பங்கேற்க டோக்கன் ஆன் லைன் மூலம் வழங்கப்பட்டது.

அதே போல் மாடுபிடிவீர்கள் ஆன்லைன் மூலம் பதியப்பட்ட 900 பேருக்கு பங்கேற்க ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுக்க, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன . மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 50 பேர் என பேர் களமிறங்கினர். கால்நடை துறை சார்பில் கால்நடைத்துறை 21 மருத்துவர்கள் தலைமையில் 65 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதேபோல மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி இந்திரா தலைமையில் 75 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்த பின் களத்திற்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர். இதுவரை மாடுபிடி வீரர்கள் 31 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், 19 பார்வையாளர்கள் காவலர்கள் 4, ரிப்போர்ட்டர் ஒருவர் என ஆகமொத்தம் 65 பேர் காயமடைந்துள்ளனர். மொத்த மாடு பிடி வீரர்களில் மருத்துவ பரிசோதனைக்கு வந்தவர்கள் 629 பேருக்கு அரசின் சார்பாக மொத்தமாக ரூ 1 கோடி insurance செய்யப்பட்டு இருந்தது.

மேலும் மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை, குடிநீர் வசதி காளைகளுக்கு உணவு, நீர் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 2 இடங்களில் எல்இடி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும், 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்திற்கு இரண்டாவது பரிசாக பைக் மற்றும் கன்று , 13 காளைகளை அடக்கிய திருப்புவனத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் மூன்றாவது பரிசாக பைக் மற்றும் கன்று வழங்கப்பட்டது.

மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மலையாண்டி சிறந்த காளைக்கு யாக முதல் பரிசாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் டிராக்டர், மேயர் சார்பில் கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசு, பேன், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

24H Car Race Ajithkumar: எனது ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை…!

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த ரேஸில் 23-வது இடம் பிடித்திருப்பதால், அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 24H கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா x தள பக்கத்தில் அஜித்தின் அறிக்கையை வெளியிட்டுள்ளார் , அதில் துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

24H Car Race Ajithkumar Team 3rd place best movements

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த ரேஸில் 23-வது இடம் பிடித்திருப்பதால், அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 24H கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வெற்றி தருணத்தின் முக்கிய தருணங்களின் புகைப்படங்கள்

24H கார் ரேஸில் அஜித் குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம்..!

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த ரேஸில் 23-வது இடம் பிடித்திருப்பதால், அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த போட்டிக்கு பின் சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாடிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் குமார் 2010-ஆம் ஆண்டுக்கு பின் அதாவது 15 ஆண்டுகளுக்கு பின் கடந்த சில மாதங்களாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித் குமார் உடல் எடையை குறைத்து ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தினார். இதன்காரணமாக துபாய் 24H சீரிஸ் ரேஸ் அதாவது 24 மணி நேரம் தொடர்ச்சியாக கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேஸிங் அணி அதாவது 3 முதல் 4 ஓட்டுநர்கள் இருக்கும் அணி பங்கேற்பது தெரியவந்தது. ஒருவர் தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேஸிங் அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நேற்று ரேஸ் தொடங்குவதற்கு முன்பாக Porsche GT4 போட்டியில் அஜித் குமார் கார் ஓட்டுவதாக தெரியவந்தது. இதனால் அஜித் குமாரை காண்பதற்காக ரசிகர்கள் ஏராளமாக கூடினர். இந்நிலையில் 24H சீரிஸ் ரேஸ் முடிவடைந்த நிலையில் அஜித் குமார் ரேஸிங் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் Porsche 911 GT3 Cup (992) 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மொத்தமாக 568 லேப்கள் ஓட்டியுள்ள நிலையில், 24 மணி நேரத்தில் 26 முறை கார் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் Razoon ரேஸிங் அணிக்காக அஜித் குமார் கார் ஓட்டியத்தில் அந்த அணி 17-வது இடத்தில் பிடித்தது. மேலும் அஜித் குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளதால், சக ஓட்டுநர்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடிய அஜித் குமாருக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ரிஷப் பந்த்: குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல..! டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது..!

குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது என டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடியது குறித்து ரிஷப் பந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார். IPL 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

ஆனால், டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பந்த்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி IPL 2025 வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இத்தனைத் தொடர்ந்து, டெல்லி கேபிட்டல்ஸ் விளையாடியது குறித்து ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது. நான் நினைத்துப் பார்க்காத வகையில் வளர்ந்துள்ளேன். நான் ஒரு இளைஞனாக டெல்லி அணிக்கு வந்தேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.

இந்தப் பயணத்தை பயனுள்ளதாக்கியது ரசிகர்களாகிய நீங்கள்தான். என் வாழ்க்கையின் கடினமான ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை அரவணைத்து, என்னை உற்சாகப்படுத்தி, எனக்கு ஆதரவாக நின்றீர்கள். நான் முன்னேறும்போது, உங்கள் அன்பையும் ஆதரவையும் என் இதயத்தில் சுமக்கிறேன். நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது குடும்பமாக இருப்பதற்கும் இந்தப் பயணத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும் நன்றி” என ரிஷப் பந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு: ரிக்கி பாண்டிங்கிற்கு ரிஷப் பந்த் மீது பாசம் அதிகம்..! ஆர்சிபியால் ரிஷப் பந்தை வாங்க முடியாது.. !

பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீது பாசம் அதிகம், ஆகையால் பஞ்சாப் அணி ரிஷப் பந்தை அவரை வாங்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் என என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவார் என்பது இன்று மிகப்பெரிய விவாதமாகியுள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் ரிஷப் பந்தின் பிராண்ட் வேல்யூ உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அவரை தங்களது அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஏராளமான அணிகள் தயாராகி வருகின்றன.

ஆனால் ரிஷப் பந்த் குறைந்தபட்சம் ரூ.25 கோடி வரை ஏலத்திற்கு செல்வார் என்று கணிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அணிகளின் பர்ஸ் தொகை குறைவாக இருப்பதால், அவர்களால் ரிஷப் பந்தை வாங்க முடியாது என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அதிக பர்ஸ் தொகை கொண்ட பஞ்சாப், ஆர்சிபி ஆகிய அணிகளால் மட்டுமே ரிஷப் பந்தை வாங்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசுகையில், என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணியின் கைகளுக்கு ரிஷப் பந்த் வருவார் என்று கருதவில்லை. ஏனென்றால் ரிஷப் பந்த் மதிப்பு மிகவும் அதிகம். அனைத்து அணிகளும் அவரை வாங்க நிச்சயம் விரும்புவார்கள்.

ரிஷப் பந்த் வாங்குவதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் செலவு செய்ய முடியும். அவர்களும் தயாராக இருப்பதாக தெரிகிறது. இது என்னுடைய உணர்வு தான். அதேபோல் ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

அதனால் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஆனால் மெகா ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை ஆர்சிபி அணி அவரை வாங்கினால் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆர்சிபி அணியின் கவனம் இம்முறை பவுலர்களை வாங்குவதில் தான் இருக்க வேண்டும் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

India vs New Zealand: 1955 – 2024 வரை 12 முறை படையெடுத்து 13 -வது முறை இந்தியாயை வீழ்த்திய நியூசிலாந்து..!

1955 – ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து விளையாடி உள்ளது. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2 – 0 என தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தொடரின் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா இருந்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை நியூசிலாந்து பதிவு செய்தது

 

Ind vs Nz Test: வரலாறு படைத்த நியூசிலாந்து..! சொந்த மண்ணில் கோட்டை விட்ட இந்தியா..!

இந்தியாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சரி தொடங்கியா நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் அதிகப்பட்சமாக 86 ரன்களும், கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுக்க இரண்டாவது இன்னிங்கிஸில் நியூசிலாந்து அணி மொத்தமாக 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், ஷுப்மன் கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து.இறுதியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தொடரை கைவிட்டது.

இந்தியா அணிக்கு எதிராக பவுலிங் செய்த நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.