IND VS AUS: ICC வரலாற்றில் கேட்ச் பிடிப்பதில் விராட் கோலி இரண்டு மாபெரும் சாதனைகள்..!

ICC சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேட்ச் பிடிப்பதில் இரண்டு மாபெரும் சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்லிஸ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரது கேட்சுகளை பிடித்தார். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 161 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் வடிவங்களிலும் ஒட்டுமொத்தமாக 336 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் மட்டும் சர்வதேச அளவில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND VS AUS: ICC 50 ஆண்டுகால வரலாற்றில்..! இமாலய சாதனை படைத்த “கிங்” விராட் கோலி..!!

ICC தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன்பின் 3 விக்கெட்டுக்கு விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து எந்த பதற்றமும் இல்லாமல் ஸ்பின்னர்களை இருவரும் வெளுத்து கட்டினர். விராட் கோலியின் அரைசதம் சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் விராட் கோலி அடிக்கும் 75-வது அரைசதம் இதுவாகும். இந்த அரைசதம் மூலமாக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி 12 ஆயிரம் ரன்களை விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி செய்துள்ளார்.

அதேபோல் ICC தொடர் வரலாற்றில் விராட் கோலி அடிக்கும் 24-வது அரைசதம் இதுவாகும். இதுவரை ICC தொடர்களில் 23 அரைசதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ICC நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 10-வது அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும் ல் ICC தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND VS AUS: ICC 14 ஆண்டு சோகத்திற்கு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா…! இறுதிக்கு முன்னேற்றம்!!

ICC தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு இந்திய கிரிக்கெட் முடிவுரை எழுதி உள்ளது. ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் வெளியேற, கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

IND VS AUS: ICC சாம்பியன்ஸ் கோப்பை முதல் அரையிறுதி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலில் இந்தியா முன்னியது..!

ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

IND vs NZ: இந்திய சுழலில் வீழ்ந்த நியூசிலாந்து..!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகள் பெற்று தற்போது முதல் இடத்தில் உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணி 15 ரன்கள் எடுத்து 2.5 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 5.1 ஓவரில் 17 பந்துகளை சந்தித்த ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 6.4 ஓவரில் இந்திய அணி 30 ரன்கள் எடுத்து 14 பந்துகளை சந்தித்த விராட் கோலி 11 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் எதிர்பாராத வகையில் ஆட்டம் இழந்தார்.

இந்த இக்கட்டான நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 29.2 ஓவரில் இந்திய அணி 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 61 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். 36.2 ஓவரில் இந்திய அணி 172 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 98 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 79 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் கே எல் ராகுல் 23 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசித்தனர்.

இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா ஆறு ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் ஜோடி அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் ரோஹித் சர்மா 12- வது ஓவரை வீச சக்கரவர்த்தி அழைத்தார்.

11.3 ஓவரில் நியூசிலாந்து 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 35 பந்துகளை சந்தித்த வில் யங் 22 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து டேரல் மிட்செல் 17 ரன்களிலும் டாம் லாத்தம் 14 ரன்களிலும் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் பிலிப்ஸ் 12 ரன்களிலும், பிரேஸ்வெல் இரண்டு ரன்களிலும் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

எனினும் கடைசிவரை நின்று இந்திய அணிக்கு பயம் காட்டிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் 40.6 ஓவரில் நியூசிலாந்து 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில்120 பந்துகளை சந்தித்த 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாட்னர் 28 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட அவரையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். இதன் மூலம் 45.3 ஓவரில் நியூசிலாந்து அணி 205 ரன்களில் ஆட்டம் இழந்தது.

நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகள் பெற்று தற்போது முதல் இடத்தில் உள்ளது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சாம்பியன் டிராபி தொடரில் தாம் விளையாடிய முதல் போட்டியிலே 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கைப்பற்றினர்

IND vs PAK: 82-வது சதம்.. ரன் மெஷினுக்கு ஆயில் போட்டாச்சு.. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானை அதிரவிட்ட விராட் கோலி!

யாரோ பத்து பேர அடிச்சி கிங் ஆனவன் இல்லடா….! நான் அடிச்ச 10 பேருமே கிங் தான்…!

இந்தியாவின் ரன் மெஷின் துருப்பிடித்து போய்விட்டது, இனி சுப்மன் கில்தான் புதிய ரன் மெஷின் என விமர்சனங்கள் செய்தவர்களுக்கு தனது வழக்கமான கவர் ட்ரைவில் பவுண்டரி தொடங்கி, 47 ரன்கள் இருக்கும்போது பவுண்டரியுடன் அரை சதம், இந்திய அணி வெற்றிக்கு 2 ரன்கள் என்ற நிலையில் 96 ரன்களில் இருந்த விராட் கோலி பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்ததுடன் தனது 82-வது சதத்தையும் நிறைவு செய்து ரன் மெஷினுக்கு ஆயில் போட்டாச்சு என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ICC தொடரில் இந்திய அணி எப்போதெல்லாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறதோ அப்போதெல்லாம் விராட் கோலி தனது உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே விராட் கோலி விளாசி இருந்தார்.

பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து விராட் கோலி வெளியேறினார். இதனால் இந்தியாவின் ரன் மெஷின் துருப்பிடித்து போய்விட்டதாக விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்திய இளம் வீரர் சுப்மன் கில்தான் புதிய ரன் மெஷினாக உருவாகிவிட்டதாக பாராட்டுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்திய அணி களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்து விராட் கோலி நிதானமாக ரன்களை சேர்த்தார். முதல் 15 ரன்களை நிதானமாக சேர்த்த விராட் கோலி, அதன்பின் தனது ஸ்டைலில் கவர் ட்ரைவ் ஒன்றை விளாசி அட்டாக்கை ஆரம்பித்தார்.

வழக்கமாகவே ICC தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதற்கேற்ப ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்த போதும் விராட் கோலி கொஞ்சம் கூட அசரவில்லை. எளிதாக பிரஷர் இல்லாமல் சிங்கிள் ரன்களை எடுத்த விராட் கோலி, கொஞ்சம் கொஞ்சமாக அரைசதத்தை நெருங்கினார். தொடர்ந்து நசீம் ஷா பவுலிங்கில் கவர் திசையில் தூக்கி பவுண்டரியை விளாசி 62 பந்துகளில் தனது 74-வது அரைசதத்தை விராட் கோலி எட்டினார். இதன் மூலமாக விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது 82-வது சதத்தையும் பூர்த்தி செய்தார். கடைசியில் பவுண்டரி அடித்து சதம் விளாசியதோடு, இந்திய அணியையும் வெற்றிபெற வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் நிரந்தர ரன் மெஷின் விராட் கோலிதான் என்றும், துருப்பிடித்த ரன் மெஷினுக்கு ஆயில் போடப்பட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஒருபக்கம் அப்ரார் அஹ்மத், மறுபக்கம் குஷ்தில் ஆகியோரை வைத்து அட்டாக் செய்த போதும், கொஞ்சம் கூட பதறாத விராட் கோலி சேஸிங்கில் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு யாரோ பத்து பேர அடிச்சி அடிச்சு டான் ஆனவன் இல்லடா….நான் அடிச்ச 10 பேருமே டான் தான்… பதிலடி கொடுத்தார்.

 

ICC Under 19 மகளிர் T 20 உலகக் கோப்பை 2025 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

ICC Under 19 மகளிருக்கான T 20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெற்ற ICC Under 19 மகளிர் T 20 உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. அந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி நிக்கி பிரசாத் தலைமையில் விளையாடியது.

A -பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை முதலிய அணிகளும் B -பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, USA முதலிய அணிகளும் C -பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சமோவா முதலிய அணிகளும் D -பிரிவில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நேபாளம் , ஸ்காட்லாந்து முதலிய அணிகளும் பங்குபெற்றனர். A -பிரிவில் நடைபெற்ற லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளை தோற்கடித்து இந்தியா இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் A -பிரிவிற்கு தகுதி பெற்றது. அதேபோல B -பிரிவில் இங்கிலாந்து அயர்லாந்து, USA ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் A -பிரிவிற்கு தகுதி பெற்றது.

மேலும் C -பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் B -பிரிவிற்கு தகுதியும், D -பிரிவில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து சூப்பர் 6 -ல் B -பிரிவிற்கு தகுதி பெற்றது. இதனைத்தொடர்ந்து சூப்பர் 6 -ல் A -பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை மற்றும் அயர்லாந்து முதலிய அணிகளும் சூப்பர் 6 -ல் B -பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், ஸ்காட்லாந்து மற்றும் நைஜீரியா பங்குபெற்றனர்.

சூப்பர் 6 -ல் A -பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா வெஸ்ட்இண்டீஸையும் இலங்கை, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. சூப்பர் 6 -ல் A -பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டுகள் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதோபோல சூப்பர் 6 -ல் B -பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இத்தனை தொடர்ந்து ஒருபுறம் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வீழ்த்திவீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேற மறுபுறம் அரையிறுதியில் இங்கிலாந்ததை இந்திய அணி 9 விக்கெட் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து ICC Under 19 மகளிர் உலக கோப்பை மாபெரும் இறுதிப்போட்டி நேற்று இந்திய நேரப்படி மதியம் 12:00 மணிக்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக், சூப்பர் 6, செமி ஃபைனலில் வென்று வந்த தென்னாபிரிக்க அணியை இந்தியா எதிர்கொண்டது.

இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. மேலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக மிக்கே வேன் வூர்ஸ்ட் 23, ஜெம்மா போத்தா 16 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் கொங்காடி திரிசா 3, வைஷ்ணவி சர்மா 2, ஆயுசி சுக்லா 2, பருனிக்கா சிசோடியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்து 83 ரன்கள் எளிய இலக்குடன் கமலினி , கொங்காடி திரிஷா ஆகியோர் களமிறங்கினர். தமிழக வீராங்கனை கமலினி 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுக்க கொங்காடி திரிஷாவுடன் சனிக்கா சால்க் இணைந்தார். கொங்காடி திரிஷாவும் சனிக்கா சால்க்கும் அதிரடியாக விளையாட 11.2 ஓவரில் 84-1 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் கொங்காடி திரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுக்க சனிக்கா சால்க் 22 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

மேலும் 2023-இல் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் இந்தியா ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றது. தற்போது இத்தொடரில் 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளுடன் கோப்பையை வென்ற இந்தியா இதையும் சேர்த்து அடுத்தடுத்த கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது. அத்துடன் 2 மகளிர் அண்டர்-19 டி20 உலகக்கோப்பைகளை அதுவும் அடுத்தடுத்து வென்ற முதல் அணியாக இந்தியா மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய திரிஷா ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்

சோசியல் மீடியாவில் டிரெண்டாகும் அஜித்குமார் மகன் ஆத்விக் புயலாய் பாய்ந்த வீடியோ..!

நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக்கின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர்களுக்கு பெயரும் புகழும் மிகவும் முக்கியம் கொடுப்பார். எனவே, புகழை குறைக்கும் வகையில் எந்த செயலையும் செய்வதற்கு தயங்குவார்கள். நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி, பைக் பந்தயங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக நாடு முழுவதும் பைக்குகளில் ரெய்டு செய்து அதன் அனுபவங்களை சேகரித்து இருந்தார்.

ஆனால் சினிமாவில் இவரை நம்பி பலர் இருப்பதால், பைக் பந்தயத்தை முழுமையாக தொடர முடியாமல் போனது. மேலும் பைக்கு பந்தயங்களில் நடக்கும் விபத்துகளால் இவரை நம்பியிருந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். அஜித்குமாரால் சொன்ன நேரத்திற்கு படத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை என்ற புள்ளி அஜித்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

https://x.com/sureshthalaras1/status/1884406686624227698

மேலும் அஜித்குமாருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கார் பந்தயம் மீது ஆர்வம் இருந்தாலும், அதில் ஈடுபட பொருத்தமான நேரம் வரவில்லை. அஜித்குமாரின் கார் பந்தயம் மீது ஆர்வம் தொடர்ந்துகொண்டே செல்ல கார் பந்தயங்களில் திரும்ப தீவிரமான பயிற்சி, விடாமுயற்சி என தனது பங்கேற்பை தீவிரப்படுத்த தொடங்கினார். அதன் விளைவு சர்வதேச கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 3-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அஜித்தின் வெற்றியை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், அஜித்குமாரின் மகன் ஆத்விக், அவரது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறார். ஓட்டப்பந்தய போட்டியில் சக மாணவர்களை வீழ்த்தி ஆத்விக் முதலிடம் பிடித்திருக்கும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.

தோனி, கே. எல். ராகுல் வரிசையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் சிக்கிய ரிஷப் பண்ட்…!

IPL 18-வது தொடர், 2025 -ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2025 IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட இருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கும், ரிஷப் பண்ட்டுக்கும் மோதல் வர வாய்ப்பு உள்ளதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற அணியை நடத்தி வந்தபோது அந்த அணியின் கேப்டனாக 2016 -இல் மகேந்திரசிங் தோனியின் நியமிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது அந்த அணி தோல்விகளை சந்தித்ததால் சஞ்சீவ் கோயங்காவுக்கு மகேந்திரசிங் தோனி மீது அதிருப்தி ஏற்பட்டது. மகேந்திரசிங் தோனி மீது இருந்த அதிருப்தியை சஞ்சீவ் கோயங்கா பொதுவெளியில் வெளிப்படுத்தியது மட்டுமின்றி மகேந்திரசிங் தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினார். அதே போல 2024 தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் கே. எல். ராகுல் இருந்தார்.

ஆனால், 2024 IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ப்ளே -ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறாமல் புள்ளி பட்டியலில் 7-வது இடம் பிடித்ததால் கே எல் ராகுல்லுக்கும், சஞ்சீவ் கோயங்காவுக்கும் கசப்பான சம்பவம் நடந்தது. ஒரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வி அடைந்தபோது கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து சஞ்சீவ் கோயங்கா திட்டி இருந்தார் . இத்தனை தொடர்ந்து கே எல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது IPL 2025 மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை சஞ்சீவ் கோயங்கா வாங்கினார் பண்ட்டை லக்னோ அணி வாங்கி இருக்கிறது. அவரை கேப்டனாகவும் நியமிக்க முடிவு செய்தார். ஏற்கனவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகி ஏலத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், சஞ்சீவ் கோயங்கா போன்ற ஒரு அணி உரிமையாளருடன் ரிஷப் பண்ட் இணக்கமாக செயல்பட முடியுமா? என ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கி அவரை கேப்டனாக நியமிக்க விரும்பியதாகவும், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி கொடுத்து வாங்கியதால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயக்கத்தில் அவரை வாங்காமல் கைவிட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2025 IPL போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் கண்ணீர் விட்டு அழுத அயர்லாந்து காரர்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தோணி கான் லான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்க காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்ற பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்தார்.

13 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை அடக்கிய ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் பாகுபலி பெற்றது. முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்த பின் மாடுபிடி வீரராக களமிறங்க முடிவு செய்தார். மாடு வீரராக களமிறங்க பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க ஆன்லைன் மூலம் தனது பெயரை பதிவு செய்து இருந்தார். இன்று ஜல்லிக்கட்டு திடலுக்கு வந்து உடல் தகுதி தேர்வில் பங்கேற்று அதில் தேர்வானார். மாடுபிடி வீரர்களுக்கு 40 வயது இருக்க வேண்டும். ஆனால், அந்தோணிக்கு 53 வயது என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.