பாரா ஒலிம்பிக்: வில்வித்தையில் வெண்கலம் வென்றார் ஹர்வீந்தர் சிங்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 10-வது நாளான இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா வெண்கல பதக்கதை கைப்பற்றினார்.

இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் வில் வித்தை வெண்கலப்பதக்கதிற்கான போட்டியில் தென்கொரியாவின் கிம் மின் – சூவை 6-5 என்ற கணக்கில் ஹர்வீந்தர் சிங் வென்று வெண்கலப்பதக்கதை கைப்பற்றினார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் 13 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஒரு படி பின்னோக்கி சென்று 37 வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 50 ரன்கள், ஷர்துல் தாகூர் 57 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெறியேற இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து 53 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மலான் 26 ரன்கள் மற்றும், கிரேக் ஓவர்டன் ஒரு ரன்னுடன் டேவிட் மலான் களத்தில் இருந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் கிரேக் ஓவர்டன் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து டேவிட் மலான் 31 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 62 ரங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒல்லி போப்ரில் தொடங்கி பின்வரிசை வீரர்கள் கைகொடுக்க 290 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர். 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதல் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மீண்டும் பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

10-வது நாளான இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா கலந்து பங்கேற்றார். ஜாங் கைப்பிங் சீனாவின் ஜாங் கைப்பிங் தங்க பதக்கத்தை கைப்பற்ற அவரை தொடர்ந்து அல்ஜீரியாவின் நாட்ஜெட் பெளவ்ச்செர்ஃப் வெள்ளி பதக்கத்தை வெல்ல அவனி லெகாரா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.

ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா என்று வெண்கல பதக்கதை கைப்பற்றியுள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் எவ்வித மாற்றமுமின்றி 36 வது இடத்தில் உள்ளது.

பாராஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

10-வது நாளான இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 18 வயதே ஆன பிரவீன்குமார் இந்திய வீரர் கலந்து பங்கேற்றார். இந்த போட்டியில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. நூலிழையில் பிரவீன்குமார் தங்க பதக்கத்தை இழந்தார். இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். நடப்பு பாராஒலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் // முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுல் நிதானமாக விளையாடினர்.  ஆனால்  இங்கிலாந்து  அணியின் கிறிஸ் வோக்ஸ் 7 ஓவர் வீசும்போது  இந்திய அணி 28 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து இருந்த  அவுட் ஆகி வெளியேறினர்.

இதன்பிறகு கே.எல் ராகுல் 17 ரன்களில் ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன்பிறகு புஜாரா 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவுக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார்.  உணவு இடைவேளையில் கோலி 18 ரன்களுடன், ஜடேஜா 2 ரன்களுடன் இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

உணவு இடைவெளி பிறகு ஜடேஜா 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் கடைசியில் அதிரடியாக  விளையாடி 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்திய அணி இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் களம் இறங்கினர். இங்கிலாந்து அணி 3.2 ஓவரில் 5 ரன்களில் ரோரி பர்ன்ஸ் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஹசீப் ஹமீத் ஆட்டமிழந்தார்.  இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் , கேப்டன் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை  வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 52 ரன்களில் கேப்டன் ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து 53 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மலான் 26 ரன்கள் மற்றும், கிரேக் ஓவர்டன் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

பாரா ஒலிம்பிக் இந்திய வீரர் வினோத்குமாரின் பதக்கம் பறிப்பு கரணம்..?

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 6-வது நாளான ஆண்கள் F52 வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது இடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் வினோத்குமார் உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்தது. இதனால், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பக் குழுவினர் மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடு மதிப்பீட்டில் தகுதியற்றவர் என்று அறிவித்ததால் வினோத்குமார் வெண்கலம் திரும்பப் பெறப்பட்டது.

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 8-வது நாளான இன்று காலையிலேயே இந்தியாவுக்கு ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் மனீஷ் நர்வால், சிங்ராஜ் அடானா ஆகியோர் பங்கேற்றனர். சிங்ராஜ் 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், வருண் பாட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தொடக்கம் முதலே தொடர்ந்து மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருவரும் 1.73 மீ, 1.77மீ, 1.80 மீ, 1.83 மீட்டர் தூரத்தை தாண்டி முதலிடத்திற்கு போட்டி போட்டு வந்தனர். ஆனால் வருண் பாட்டி 1.80 மீட்டர் உயரத்தை தாண்ட முடியாமல் வெளியேறினார். இறுதியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் இருவருமே சறுக்கலை சந்தித்தனர். 1.86 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தங்கவேலு தாண்டிவிட்ட நிலையில் ஷரத் குமார் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை.

இதனால் மாரியப்பன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சேம் க்ரேவ் அகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். பரபரப்பு போட்டி இறுதியில் 1.88 மீட்ட உயரத்தை மாரியப்பனால் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் சேம் க்ரேவ் தனக்கு வழங்கப்பட்ட 3வது வாய்ப்பில் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியானது. 3வதாக வந்த ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 8 வது நாளான இன்று இந்திய ஷூட்டிங் குழுவினரின் அற்புதமான ஓட்டத்தை தொடங்கினர். இதில் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ் அதானா ஆகியோர் அசாகா ஷூட்டிங் ரேஞ்சில் நடந்த ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இல் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றனர். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த மணீஷ் நர்வால், இறுதிப்போட்டியில் 135.8 புள்ளிகளுடன் ஏழாவது இடம் பிடித்தார்.

தகுதி சுற்றில் ஆறாவது இடத்தில் இருந்த சிங்கராஜ், இறுதிப் போட்டியின் முதல் கட்டத்தில் தரவரிசையில் முதலிடம் பெற அற்புதமாகத் தொடங்கினார்.  இறுதிப் போட்டியில் மொத்தம் 216.8 புள்ளிகளுடன் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (SH1) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

பவினா படேல் வென்றது  முதல் வெள்ளி // நாட்டிற்கு போட்டது பிள்ளையார் ”சுழி”

குஜராத் மாநில மெக்சனா நகரைச் சேர்ந்த ஒரு  சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி பவினா ஹஸ்முக்பாய் படேல் பிறந்தார். பவினா படேல் 12 மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோமைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை  அவரின் குடும்பத்தினர் தாமதாகவே கண்டுபிடித்தனர்.  பின்னர், பவினா படேல் கிராமத்திலுள்ள ஒரு சாதாரண பள்ளியில் தனது படிப்பை மேற்கொண்டார். பவினாபடேலுக்கு  9 வயது  அதாவது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், வயது சிறியவராக இருந்த பவினா படேல் அலட்சியம் மற்றும் சரியான மறுவாழ்வு உடற்பயிற்சிகளை செய்யாத காரணத்தால் பழைய நிலையையே அவர் தொடர வேண்டி இருந்தது. பவினா பட்டேலின் தந்தை ஹஸ்முக்பாய் படேல், பார்வையற்ற மக்கள் சங்கத்தின் விளம்பரத்தை 2004இல் பார்த்து குஜராத், அகமதாபாத்தில் உள்ள  நிறுவனத்தில் ஐடிஐ படிப்புக்காக அவரை சேர்த்தார்.

பின்னர், பவினா படேல் தொலைதூர கல்வி மூலம் குஜராத் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தபோது, தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விளையாட்டுகளின் மீது ஆர்வம் காட்டி வந்ததை கண்ட லக்கியா, பவினா படேலை  லலன் தோஷியுடன் என்பவருடன் இணைத்துவிட்டார். லக்கியா மற்றும் லலன் தோஷி தான் உடற்தகுதிக்கான உடல் செயல்பாடுகளில் பவினா படேல் ஆர்வம் காட்ட தூண்டியிருக்கின்றனர்.

இதுவே பின்னாளில் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வழிவகை செய்தது மட்டுமின்றி தொழில் ரீதியாக டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கி, பின்னர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பெங்களூருவில் நடந்த முதல் பாரா-டேபிள் டென்னிஸ் தங்கப் பதக்கத்தை வென்று தேசிய அளவில் பெயர் பெற்றார். பிறகு, சர்வதேச அளவில் தனது பெயரை உருவாக்கத் தொடங்கினார். பவினா படேலின் முதல் வெளிநாட்டு போட்டி ஜோர்டானில் நடந்த டேபிள் டென்னிஸில் கலந்து கொண்டு  பதக்கம் எதுவும் வெல்லாமல் நாடு திரும்பினார்.

அதன்பின்னர்  பவினா படேல்  கடினமாக உழைத்து டேபிள் டென்னிஸில் அனுபவத்தைப் பெற போராடினார். 2011 ஆம் ஆண்டில், தாய்லாந்து ஓபனில் தனது முதல் சர்வதேச வெள்ளி பதக்கத்தை வென்றார். பின்னர் 2013ல் ஆசிய பிராந்திய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் புதிய வரலாறு படைத்தார். அதன்பிறகு 2019ல் பாங்காக்கில் தனது முதல் தங்கத்தை வென்றார் பவினா படேல். தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் நிகுல் பட்டேலை 2017-ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர்,  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து போட்டியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள்  9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட வீரர்களில் பவினா படேலும் ஒருவர்.

பவினா படேலுக்கு இந்த பாராலிம்பிக்ஸ் முதல் போட்டியில் சீனர்களின் பிடித்தமான விளையாட்டான டேபிள் டென்னிஸில் சீன வீராங்கனை யிங் சூ-வுக்கு எதிரான அந்த முதல் போட்டியில் மூன்று கேம்களையுமே தோற்று முதல் போட்டியில் படுதோல்வியை தழுவியிருந்தார். உலக அரங்கில் முதல் போட்டியில் இவ்வளவு மோசமாக தோற்ற  பவினா படேல்  தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கி இருந்தாலும் மறுநாள் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலேயே பிரிட்டன் வீராங்கனைக்கு எதிராக 3-1 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வி தழுவி தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கியது.

அடுத்து மூன்றாவது போட்டி இரண்டு வீராங்கனைகளும் முட்டி மோதி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். சராசரியாக 6 நிமிடத்தில் முடியும் போட்டிகள் 10 நிமிடத்துக்கு மேல் நீடித்தது. நிறைய சவால்களை கடந்து  பவினா படேல் 17-15 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று தன்னால் சாதிக்க முடியும் என்பதை தனக்கு தானே மன தைரியத்தை வளர்த்தார்.  இந்த வெற்றியின் மூலம், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.

பிரேசில் வீராங்கனைக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் நேருக்கு நேர் சரிசமமாக விளையாடி கடைசியில்  3-0 என்ற செட் கணக்கில்  பவினா படேல் வென்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனை பெரிக் ரேங்கோவிக்கை எதிர்கொண்டு போட்டியை மிக எளிமையாக வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி பவினா படேல் சீன வீராங்கனை ஷாங் மியாக்கு எதிராக மோதினர்.  சீன வீராங்கனை ஷாங் மியாக்கு உடன் போட்டியில் முதல் சுற்றில் தோற்றார். ஆனால் சற்று சுதாரித்த இரண்டாவது சுற்றை தன் வசப்படுத்தினர். இதனால் மூன்றாவது சுற்று மிகவும் கடினமாக அமைந்தது. இந்த மூன்றாவது   சுற்றையும்  தன் வசப்படுத்தினர். நான்காவது சுற்று மிகவும் கடினமாக சுற்று சீன வீராங்கனை ஷாங் மியாக் கைப்பற்றி போட்டி 2-2 என சமநிலைக்கு வந்தது. கடைசி ஐந்தாவது சுற்று இதை வெல்பவரே  இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். ஐந்தாவது சுற்றில் முதலில்  சீன வீராங்கனை ஷாங் மியாக் 5 புள்ளிகள் பெற்ற நிலையில் போட்டியில் விஸ்பரூபம் எடுத்த பவினா படேல் சீன வீராங்கனை சிம்மசொப்பனமாக இருந்து கடைசி சுற்றில் அபார வெற்றி பெற்று 3-2 என அரையிறுதியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

வீல் சேரில் அமர்ந்தபடி இடது கையால் பந்தை விரட்டும் பவினா படேல் இந்த பாராஒம்பிக்கில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் பெரிச் ரன்கோவிச்சுக்கு கூட அதிர்ச்சி அளித்து ஆனால் தொடக்க லீக்கில் யாரிடம் தோற்றாரோ கடைசியில் இறுதி சுற்றிலும் அவரிடமே மீண்டும் தோற்று தங்க பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று பாராஒம்பிக்கிக் போட்டிகள் தொடங்கி நான்கு நாட்கள் முடிந்தும் பதக்க பட்டியலில் இடம்பெறாத தவித்தது வந்த நம் நாட்டிற்கு முதல் பதக்கத்தை பவினா படேல் உச்சிமுகர  வைத்தார்.

இந்தியா ஹாக்கி பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கி பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.