வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழையால் இரண்டரை நாள் போட்டி பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில்தான் இந்த போட்டி முடிவடையும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்து இருந்தனர். ஆனால் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் t 20 போல அபாரமாக விளையாடி வெற்றியை ருசித்தது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட. 35 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வீச நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி டி20 கிரிக்கெட் அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை அடித்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது முதல் முறையாகும். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட 18.2 ஓவரில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி அதிவேகமாக 150 ரன்களை எட்டி சாதனை படைத்தது.
அதிஷ்ட வசமாக ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க வெளியேற விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இவர்கள் பங்கிற்கு அதிரடியை காட்டினார். இதன்விளைவாக 24.2 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறை என்ற இமாலய சாதனையை நடத்தி காட்டியது.
விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட 30.3 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைத்தது.
இந்நிலையில் இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி ஜாகிர் ஹசன் மற்றும் ஹஸன் மகமுத் விக்கெட்டை இழக்க நான்காம் நாள் ஆட்டம் முடிவில் வங்கதேச அணி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து இருந்தது.
கடைசி நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடங்க அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு பும்ராவும் தன்னுடைய பங்குற்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி 47 ஓவர் முடிவில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கில் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணி ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்க 2.1 ஓவரில் 18 ரன்கள் என்ற நிலையில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் இணைந்து விளையாட 4.5 ஓவரில் 34 ரன்கள் என்ற நிலையில் சுப்மன் கில் 8 6 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன், விராட் கோலி இணைய ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.
இதனை தொடர்ந்து 15.6 ஓவரில் 92 ரன்கள் என்ற நிலையில் ஜெய்ஸ்வால் 51 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். விராட் கோலியுடன் இணைத்த ரிஷப் பந்த் கடைசி வரை நின்று விராட் கோலி 29 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 4 ரன்கள் சேர்த்து 17.2 ஓவர் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.