ஓமியோபதியில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.


கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7800 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது.


கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து, கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவிற்கு வெளியே ஹாங்காங், தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மக்காவோ, சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா, தைவான், ஜப்பான்,பிரான்ஸ், இலங்கை, வியட்நாம், நேபாளம், ஜெர்மனி, கனடா, இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேரள மாநில அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை மந்திரி சைலஜா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி கவுன்சில்கள் மேற்கொண்டன. இந்த ஆய்வில், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானி அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பான பரிந்துரைகளை ஆயுஷ் அமைச்சக டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனை: உயிரைக் கொல்லும் மர்ம வைரஸ் 

2002-2003 இல் சார்ஸ் வைரஸ் சீனாவில் 349 பேரையும், ஹாங்காங்கில் 299 பேரையும் கொன்றது. இருமல், காய்ச்சல் மட்டுமின்றி கடுமையான சுவாச நோய் அறிகுறியுடனுடம் கண்டறியப்பட்டுள்ளன. “பரந்த சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் யாரும் இதுவரை கண்டிராத விகாரமான தோற்றம் கொண்ட வைரஸ் சளி, இருமல், காய்ச்சல் என்று தொடங்கி உயிரையே பறிக்கும் தீவிர நோய்த்தன்மையில் கொண்டுபோய்விடும் அபாய தன்மையைக் கொண்டது” என்று தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்கு சந்தையிலிருந்து பரவிய இந்த வைரஸினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் சீனாவிலிருந்து சென்ற தாய்லாந்து மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இருவரை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால், ‘சீனாவின் வுஹானில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க்கின் ஜே.எஃப்.கே மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று விமான நிலையங்களில் புதிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய அறிகுறிகளுக்கான மருத்துவத்துறையின் ஸ்கேனிங் உடல் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த மூன்று விமான நிலையங்களுக்குக் கூடுதலாக மருத்துவத் துறை சார்ந்த 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர்.