பிரியங்கா காந்தி: இறுதிவரை நாங்கள் நீதிக்காக போராடுவோம்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில், இறுதிவரை நாங்கள் நீதிக்காக போராடுவோம். மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்படும்போது தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் கூறுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் கண்டனம்: கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் வன்முறை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில், “ உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு TTV தினகரன் கண்டனம்

TTV தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தில் அணுசக்தி துறை அளித்த உறுதிமொழிக்கு மாறாகவும் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இப்படி ஓர் அணுக்கழிவு மையம் அமைவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.தினகரன் என தெரிவித்துள்ளார்

E.R. ஈஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான  E.R. ஈஸ்வரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் அளவில்லா முறைகேடுகள் நடந்தேறியிருக்கிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி: இந்திய-சீன எல்லையில் புதிய போர் அபாயம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அந்த பதிவில், “எல்லைகளில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம். அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது.

ஒரே நாளில் 453 நிலத்தரகர்கள் அதிரடி கைது

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 453 நிலத்தரகர்கள் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா டுவிட்டரில் பக்கத்தில், ‘மாநிலத்தில் இடைத்தரகர்கள் ராஜ்ஜியத்தை ஒழிக்கும் விதமாக சட்டவிரோத நிலத்தரகு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களை தொந்தரவுபடுத்தும் இடைத்தரகர்களின் செயல்பாடு முடிவுக்கு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு:  பாஜக அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம்

புதிய வேளாண் சட்டம், தொடர் விலையேற்றம், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து 20-9-2021 அன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

முருகானந்தம் தாக்கப்பட்டதற்கு TTV தினகரன் கண்டனம்

அமுமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு குரு. முருகானந்தம் அவர்கள் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்வு TTV தினகரன் கண்டனம்

பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.