ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து உருமாறிய தலிபான்கள் கைகளில் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தான்

இன்று உலகின் பார்வை முழுவதும் தாலிபான்கள் மற்றும்  ஆப்கானிஸ்தான் பற்றியது. திரும்பும் திசையெல்லாம் தாலிபான்கள் மற்றும்  ஆப்கானிஸ்தான் குறித்த பேச்சுதான். சர்வதேச நாடுகள், ஊடகங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வை உற்று நோக்கி வருகின்றன. ஊடகங்களில் வெளிவரும் ஒரே செய்தி தாலிபான்களை பற்றியது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்ற சில வாரங்கள் ஆகும் என அமெரிக்க உளவுத் துறை கணித்திருந்த நிலையில், ஒரே வாரத்தில் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ள இந்த தாலிபான்கள் யார்?

ஆப்கானிஸ்தானில் 1978 – 1988 -ஆம்  ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இருந்த ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை பறிகொடுத்தது வேறு வழியின்றி 1988ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் காரணமாக  இருந்த தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரஷ்யா தெரிவிக்க காரணம் என்ன?  அன்று  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்  ஆட்சியின்  போது பல புத்தர் சிலைகள் தகர்த்திய தாலிபானுக்கு புத்தரை தெய்வமாக வழிபாடும் சீனா நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள தயார் என தெரிவிக்க காரணம் ?

அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியனுக்கும் இடையே மறைமுக யுத்தம் உச்சத்தில் இருந்த காலம். ஆப்கானிஸ்தானில் இடது சாரிகள் கம்யூனிஸ்ட்  1978-இல் சோவியத் யூனியன் ஆதரவுடன் அரசை  அமைத்தனர். ஒரே ஆண்டில் அந்த அரசு கவிழ்க்கப்பட்டு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகளுக்கு  அப்போது சோவியத்  யூனியனுக்கு எதிராக ‘தலிபான்’  என்ற மாணவர்கள்  அமைப்பினரைப் போர் புரிய அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கி சோவியத் யூனியனுக்கு தலைவலியைக் கொடுக்க அமெரிக்கா உருவாக்கியது,

1994 ஆண்டு முல்லா முகமது ஓமர் மற்றும் அவரது மாணவர்களால்  பாகிஸ்தான் ஆதரவுடன் உலகை குலைநடுங்க வைக்கும்  அமைப்பு பிறந்தது  கொரில்லா தாக்குதளுக்கு சொந்தக்காரர்களான தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்து, அரவணைத்தது. பாகிஸ்தானில் பயின்றவர்கள் தலிபான் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தலிபான்கள் படிப்படியாக தங்களது எல்லையை விரிவுபடுத்தி 1988இல் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் 1996 முதல் 2001 வரை ஆப்கானித்தான்  ஆட்சி செய்தார்கள். அப்போது தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துக்கும் தடை  ஷரியத் சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தியது. மேலும் ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் அதேபோல பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும், பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது. கார் ஓட்டக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, போன்ற கடுமையான சட்டங்கள் மட்டுமின்றி, பொதுவெளியில் குற்றவாளிகளுக்கு  தண்டனை என தாலிபான்கள் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்தது.

இதற்கும் ஒரு படி மேலே சென்று  2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் இருந்த புத்தர் சிலைகளை தலிபான்கள் வெடிவைத்து தகர்த்தினர். அமெரிக்காவிடம் இருந்து பொருளுதவி பெற்று உருவான தலிபான்கள்  2001ம் ஆண்டு  செப்டம்பர் 11ம் தேதி  அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், பெண்டகன், வாஷிங்டன், பென்சில்வானியா ஆகிய இடங்களில் அல்கொய்தா  வான்வழி தாக்குதலை நடத்தியத்தில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது மட்டுமின்றி தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் இந்த தாக்குதல்களை ஒருங்கிணைத்தார் என அமெரிக்கா  குற்றச்சாட்டு வைத்தது.

அதனால் ஒசாமா பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்  படி அமெரிக்கா  தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு  தாலிபன்கள் செவிசாய்க்கவில்லை. அமெரிக்காவின் அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத நடவடிக்கைகளை வேரோடு அழிக்க உறுதியேற்ற அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தீவிரவாதிகளை அழிக்க  நடவடிக்கையே கையில் எடுத்தது. அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தன.

அல்கொய்தாவுக்கு தாலிபான்கள் உதவி செய்வதை தடுத்து நிறுத்தவும் ஆப்கானிஸ்தானை தங்களின் புகழிடமாக அல்கொய்தா பயன்படுத்துவதை தடுக்கவுமே அந்நாட்டின் மீது படை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு அமைக்க ஆதரிப்பதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்தது. 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான தலைவர்கள் ஜெர்மனியின் “பொன்” நகரில் கூடி ஆராய்ந்து,  “ஹமீது கர்சாய்” ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2003 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு 2004-ல்  நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலில்  ஹமீது கர்சாய் அதிபராகத் தேர்ந்தெடுக்கபட்டார். ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை நேட்டோ கூட்டுப்படையினர், அமெரிக்கா தலைமையில் மேற்கொண்டனர். மறுபுறம் பல குழுக்களாக பிரிந்த தாலிபன் போராளிகள் மீண்டும் அணி சேர்ந்தனர். அதன் பிறகு மிகவும் கொடூரமான வகையில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தினர்.

ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் எதற்காக முகாமிட்டதோ ( அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஒசாமா பின்லேடன், முல்லா முகமது உமர் பலியானார்) அதை கச்சிதமாக முடித்து கொண்டது. இதையடுத்து, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில்  2020ஆம் ஆண்டு பிப்ரவரி – 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11க்குள் அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

நேட்டோ சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தங்களுடைய போர் பணியை முடித்துக் கொண்டன. நேட்டோ சர்வதேச படைகள் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் ராணுவத்திற்கு எவ்வளவே நவீன ஆயுதங்களையும் பயிற்சியும் கொடுத்து  ஆப்கானிஸ்தானிய ராணுவத்தை சீட்டு கட்டு போல அடுக்கி வைத்திருந்தது. ஆனால் தாலிபான்கள் ஒரே வாரத்தில் பயம் என்ற ஆயுதம் கொண்டு ஒட்டுமொத்த சீட்டு கட்டையும் சிதறடித்தது. அதன் விளைவு ஆப்கானிஸ்தான் இன்று தாலிபான் கைகளில்…

தலைநகர் டெல்லியில் இன்னும் எத்தனை நிர்பயாக்கள் கொடூரமாக மரணிக்கப் போகிறார்கள்..!?

பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவில், பண்பாடு , ஆன்மீகம் , மனித உரிமை , பெண் உரிமை என என்னதான் பேசித்திருந்தாலும் , இந்தியாவில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கடும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதிலும், குற்றங்கள் குறையாத நிலையே தொடர்ந்து கொண்டே செல்வது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்படுத்துகிறது.

தெற்கு டெல்லியின் பதர்பூர் பகுதியிலுள்ள பொது கழிவறை அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றது, டெல்லியில் 35 வயது பெண் ஒருவர் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டுள்ள சம்பவம் என டெல்லியில் நடைபெற்ற சம்பவங்களை  அடுக்கிக்கொண்டே போகலாம்.

நம் நாட்டின் தலைநகரம் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்போது கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறை அதிகாரி மார்பகங்கள் வெட்டப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த மாதம் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள பழை நாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் 9 வயது  சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள தர்காவுக்கு முன்பாக விளையாட செல்வதாக கூறினார். ஆனால், ஐந்து நிமிட நடை தூரத்திலு ள்ள இடுகாட்டு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருமாறு சிறுமியை பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.  பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல்  தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்ற 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெற்றோர் மற்றும் நாடே வீதியில் நின்று  நீதி கேட்டு போராடி பிறகு குற்றவாளிகள் பிடிபட்டது நாடறிந்தது.

கடந்த மாதம் டெல்லியை உலுக்கிய சம்பவம் மக்களின் மனதில் மறையும் முன்னே டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நீண்ட நாட் கனவு சில மாதங்களுக்கு முன்புதான் நனவானது கிழக்கு டெல்லியின் உள்ள சிவில் டிபென்ஸ் காவல்துறை அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி அவர் மாயமானார். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று கொலை செய்து விட்டு உடலை வீசி விட்டு சென்று விட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு டெல்லி காவல்துறை இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். பெண் காவல்துறை அதிகாரியின் சடலத்தை மீட்ட கிழக்கு டெல்லி காவல்துறை இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவரின்  பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்துவந்ததாகக் கூறப்படும் நிஜாமுதீன் என்பவர்மீது காவல்துறைக்குச் சந்தேகம் எழவே, நிஜாமுதீனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். ஆனால், காவல்துறை தன்னைத் தேடுவது தெரிந்து தலைமறைவான நிஜாமுதீன் பின்னர், இளம்பெண்ணைக் கொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பெண் காவல்துறை போலீஸ் அதிகாரியின் பெற்றோர் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிச்சத்திற்கு வந்த நிர்பயா பாலியல் வழக்கு முதல் தற்போது நடந்த 21 வயது சபியா என்ற சிவில் டிபென்ஸ் காவல்துறை அதிகாரி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. கூட்டு பாலியல் மற்றும் கொலை வழக்கு வரை தலைநகர் டெல்லி நடந்துள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கொரோனா வைரஸ் காய்ச்சலை தடுப்பது எப்படி…! செய்ய வேண்டியது என்ன….

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.


கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7800 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது.

வைரஸ் தாக்குதலை தடுக்க கைகளை சோப்பு நீரில் அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும். கழுவப்படாத கைகளால் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடக்கூடாது. கொதிக்க வைத்த நீரை வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது. நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கி இருக்கக்கூடாது.

நோய்வாய்ப்பட்டவர்கள் வெளியே செல்ல வேண்டாம். இருமல் அல்லது தும்மல் வந்தால், முகத்தை மூடி தும்மிவிட்டு, பின்னர் கைகளை கழுவ வேண்டும். அடிக்கடி தொடும் பொருட்களையும் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பயணம் செய்தால், ‘என் 95‘ வகை முகமூடியை பயன்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால், முகமூடி அணிந்து உடனடியாக மருத்துமனையை தொடர்பு கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவ முறையில் தடுப்பு மருந்துகள் உள்ளன. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவற்றை உட்கொள்ள வேண்டும்.