Car Racing: இத்தாலியில் சாதித்த அஜித் குமார் ரேஸிங் அணி..!

நடிகர் அஜித்குமார் கார் ரேஸிங்கில் இத்தாலி நாட்டில் நடந்த ரேஸிலும் 3-வது இடம் பிடித்து அஜித்குமார் ரேஸிங் சாதனை படைத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே கார் ரேஸிங்கில் சாதித்த அஜித்குமார் அப்போது ஏற்பட்ட காயத்தால் கார் ரேஸிங்கில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இதற்கிடையே இப்போது மீண்டும் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அவர் இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனியாக கார் ரேசிங் டீமையும் ஆரம்பித்து இருந்தார்.

முதற்கட்டமாகக் கடந்த ஜனவரி மாதம் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. அதில் மிகச் சிறப்பாக அஜித்குமார் ரேஸிங் அணி செயல்பட்ட நிலையில், 3-வது இடத்தை பிடித்தது. துபாயை தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் கார் ரேஸ் நடந்து வருகிறது. இத்தாலி கார் ரேஸ் அதில் தொடர்ச்சியாக அஜித் குமார் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதன்படி இப்போது இத்தாலி நாட்டில் நடந்த கார் ரேஸிங்கிலும் அஜித்குமார் அணி பங்கேற்றுள்ளது. இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற முகெல்லோ சர்க்யூட் இல் இந்த போட்டி நடந்தது.

அதில் 12-ஹெச், அதாவது 12 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில் GT992 பிரிவில் அஜித் அணி களமிறங்கியது.. 3-வது இடம் பிடித்த அஜித் இந்த ரேஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அஜித் குமார் ரேஸிங் அணி, அதில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.. துபாயைத் தொடர்ந்து இப்போது இத்தாலி சுற்றிலும் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் பிடித்துள்ளது.