நாசா எச்சரிக்கை: 610 அடி உயரம்..! மணிக்கு 41 ஆயிரம் கி.மீ வேகத்தில்..! பூமியை நோக்கி வரும் விண்கல்..!

610 அடி உயர பெரிய விண்கல் ஒன்று மணிக்கு 41 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த விண்கல் மட்டும் இன்றி மற்றொரு சிறிய விண்கல்லும் பூமியை நோக்கி பல லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கற்களின் பாதையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது.

அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும். பெரும்பாலான விண்கற்கள் வளிமண்டலத்தில் எரிந்து துகள்களாக போய்விடும் என்றாலும் அரிதாக சில விண்கற்கள் பூமி மீது விழுவதுண்டு. அவ்வப்போது பூமிக்கு நெருக்கமாக சில விண்கற்கள் வரும் போது அவை பூமி மீது விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பூமியை நோக்கி இரண்டு மிகப்பெரிய விண்கற்கள் வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 KH3 மற்றும் 2024 PK1 என்ற விண்கற்கள் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில், 2024 KH3 என்பது அளவில் மிகப்பெரியது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 41,125 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் இத விண்கல், 610 அடி உயரம் கொண்டது. எனவே, இந்த விண்கல் பூமியில் மோதினால் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தலாம்.

 

ஆனால், இந்த விண்கற்கள் பூமி மீது மோத வாய்ப்பு இல்லை எனவும் பூமிக்குக் எந்த அச்சுறுத்தலும் இன்றி கடந்து சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த விண்கல் மீண்டும் வரும் 2037 ஜூன் மாதம் பூமியை நோக்கி வர வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதேபோல், அளவில் மிகச்சிறிய 2024 PK1 என்ற விண்கல்லும் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் 6,460,000-கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. 110 அடி உயரம் கொண்ட இந்த விண்கல்லும் இன்றே பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த இரு விண்கற்களையும் நாசா மட்டும் இன்றி பிற விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். கடைசி நேரத்தில் விண்கல் தனது பாதையை மாற்ற வாய்ப்பு குறைவாக இருந்தாலும் இந்த விண்கல் செல்லும் பாதையை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.