டிவி சேனல்கள் மாலை அல்லது இரவு நேரங்களில் இப்போதெல்லாம் தினசரி ஒரு தலைப்பில் அரசியல்வாதிகள், வல்லுநர்களை அழைத்து அனைத்து டிவி சேனல்களும் விவாதித்து வருகிறது. ஒரே நேரத்தில் பலர் கத்துவது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கவே செய்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேர் அப்சல் மார்வத் மற்றும் அங்கு இப்போது ஆளும் கட்சியாக உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியைச் சேர்ந்த அஃப்னானுல்லா கான் ஆகியோர் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது இம்ரான் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்சல் மார்வத் திடீரென எழுந்து அஃப்னானுல்லா கானை ஓங்கி ஒரு அறை அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அஃப்னானுல்லா கானும் தாக்குதலில் இறங்கினார், இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். நிகழ்ச்சி நெறியாளர் அவர்கள் அமைதிப்படுத்த முயன்ற போதும் ஒன்றும் நடக்கவில்லை. இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் தாக்கிக் கொண்டது மட்டுமின்றி மிகவும் மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பயன்படுத்தினர். இந்த மோதல் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படாது.