விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிறயன் லாறா கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் கிரிக்கெட்டில் தங்களது அபாரத் திறமைகளால் உலகெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப் போட்டார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். உலகெங்குமுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய ஃபார்மை இழந்து தவிக்கும்போது அவர்களை அவர்களுடைய அணியில் இருந்து ஒதுக்கி ஓரம் கட்டுகிறார்கள்.
அத்தகைய வீரர்களுக்கு ஒவ்வொரு வீரர்களுக்கு தன்னுடைய திறமைகளை வெளி உலகிற்கும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு களமாக இந்தியாவில் 2008 ஆண்டு ஐபிஎல் போட்டி தொடர்கள் உருவாக்கபட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு தொடர்ச்சியாக 15-வது ஐபிஎல் திருவிழா கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் தொடங்க மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம் மற்றும் டிஒய் பாட்டீல் மைதானங்களில் 55 போட்டிகளும் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மீதமுள்ள 15 போட்டிகள் என ஆக மொத்தம் 70 போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளான சேர்க்கப்பட்டு குரூப்-1 மற்றும் குரூப்-2 சுற்றில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் குரூப்-1ல் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மற்றும் குரூப்-2 ல் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத ஆகமொத்தம் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட லீக் சுற்று முடிவில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் இரண்டு அரையிறுதிக்கு முன்னேறும்.
இப்படி ஒரு சூழலில் விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து கேப்டன் பொறுப்புகளும் அவரை விட்டு போன நிலையில் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விராட் கோலி சாதாரண வீரராக களமிறங்க மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் எதிரான முதல் போட்டியில் 17.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட்டு இழக்க 17 பந்துகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 14 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர்கள், 3 பெளன்ரிகள் ஸ்ட்ரைக் ரேட் 228.57 என்ற நிலையில் 32 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 205 ரன்கள் எடுத்தது. இருப்பினும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.
அடுத்து மார்ச் 30-ம் தேதி நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 17.2 ஓவரில் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆறு விக்கெட்டு இழக்க 16 பந்துகளில் 22 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேலுயுடன் ஜோடி சேர்ந்து 7 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 1 சிக்ஸர், 1 பெளன்ரி ஸ்ட்ரைக் ரேட் 200 என்ற நிலையில் 14 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணியை முதல் வெற்றியை ருசிக்க வைத்தார்.
தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான மூன்றாவது போட்டியில் நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 169 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழக்க 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 12.3 ஓவரில் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஷஹ்பஸ் அகமதுடன் ஜோடி சேர 23 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 1 சிக்ஸர், 7 பெளன்ரிகள் ஸ்ட்ரைக் ரேட் 191.30 என்ற நிலையில் 44 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணியை இரண்டாம் வெற்றியை பதிவு செய்ய வைத்தார்.
அடுத்து ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் எதிரான நான்காவது போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 151 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழக்க 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 12.2 ஓவரில் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கிளென் மாக்சுவெலுடன் ஜோடி சேர 2 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 1 சிக்ஸர் ஸ்ட்ரைக் ரேட் 350 என்ற நிலையில் 7 ரன்கள் எடுக்க நிலையில் ஆர்சிபி அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய வைத்தார்..
தொடர்ந்து ஏப்ரல் 14-ம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஐந்தாவது போட்டியில் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 216 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழக்க 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 12.2 ஓவரில் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஷஹ்பஸ் அகமதுடன் ஜோடி சேர 14 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர்கள், 2 பெளன்ரிகள் ஸ்ட்ரைக் ரேட் 242.86 என்ற நிலையில் 34 ரன்கள் எடுக்க நிலையில் ஆட்டமிழக்க ஆர்சிபி அணி நான்காவது வெற்றியை இழந்தது.
அடுத்து ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிரான ஆறாவது போட்டியில் 11.2 ஓவரில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், மீண்டும் ஷஹ்பஸ் அகமதுடன் ஜோடி சேர்ந்து 34 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 5 சிக்ஸர்கள், 5 பெளன்ரிகள் ஸ்ட்ரைக் ரேட் 194.12 என்ற நிலையில் 66 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 173 ரன்கள் மட்டுமே எடுக்க ஆர்சிபி அணி நான்காவது வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிரான ஏழாவது போட்டியில் 8 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 1 சிக்ஸர் ஸ்ட்ரைக் ரேட் 162.50 என்ற நிலையில் 13 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 163 ரன்கள் மட்டுமே எடுக்க ஆர்சிபி அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திற்கு நகர்ந்தது.
தற்போது வரை ஆர்சிபியின் டாப் ரன் ஸ்கோரராக தினேஷ் கார்த்திக் தான் 210 ரன்களுடன் இருக்கிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 209 ஆகும். 7 போட்டிகளில் 2 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுவிட்டதால், அடுத்த ஃபினிஷர் கிடைத்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இந்த முறை தொடக்கத்தில் இருந்தே மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினேஷ் கார்த்திக் 26 பந்தில் அரைசதம் அடித்த சூறாவளி ஆட்டம் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 5 சிக்ஸர்கள், 5 பெளன்ரிகள் என கடைசி ஓவர்களில் 66 ரன்கள் அடித்து நொறுக்கியது கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதன் விளைவாக 1000 கிலோ மீட்டர் வேகத்தை வேகத்தில் அதிரடியை பார்க்க வந்திருக்கிறோம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.
மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இருந்தவரை தினேஷ் கார்த்திக் திறமைகள் இருந்தும் இந்திய அணியில் ஒரு பேக்கப் பிளேயராகவே வைக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய அணியின் கதவுகள் அடைக்கப்பட்டாலும் ஐபிஎல் போட்டிகள் தினேஷ் கார்த்திகின் கிரிக்கெட் வாழ்க்கை அர்த்தமம் ஆகாமல் பார்த்து கொண்டது. இருந்த போதிலும் தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியின் மீது இருந்த மோகம் தணியவில்லை.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கடைசியாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனதை பார்த்த ரசிகர்கள் இனிமேல் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துவிடாதது என நினைக்கையில் 1000 கிலோ மீட்டர் வேகத்தில் 360 டிகிரியில் விளையாடி அசத்தியத்தை பார்த்த ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் டிவில்லியர்ஸ் தினேஷ் கார்த்திக்கை லண்டனில் வர்ணனையாளராக இருந்தார். அவரின் கிரிக்கெட் எதிர்காலமே முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால் இக்கட்டான சூழலில் 360 டிகிரியில், 210 ஸ்ட்ரைக் ரேட்டில் 6 போட்டிகளில் விளையாடி 2 முறை ஆட்ட நாயகன் விருது என தான் கிங் என நிரூபித்துக் காட்டியுள்ளார். அவரின் ஆட்டத்தை பார்த்தால், எனக்கு மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற ஆசை என புகழும் அளவிற்கு சிறந்த ஃபினிஷராக மாறிவிட்டார் என கொண்டாடி வருகின்றனர்.