நியூலேண்ட்ஸ்  மைதானத்தில் கண்டிப்பாக பல மடங்கு பதிலடி: தென்னாப்பிரிக்க வீரர்களின் சீண்டல்களை கவனித்த விராட் கோலி

விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு ரொம்ப சகஜம் என்பதை  T20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி செயல்பாடு உலகையே மெய் சிலிர்க்க வைத்தது.

சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்வில் உலக கோப்பை எட்டாத கனவாக இருந்து சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறும்போது அவருக்காக இந்திய அணி கோப்பையை வாங்கியதில்  இந்திய அணி தலைவர் விராட் கோலி பங்கும், வெற்றி கோப்பையுடன் சச்சின் தெண்டுல்கர் தன் தோளில் சுமந்து சென்றபோதே நான் சுமந்து செல்வது உங்களை மடடுமல்ல நீங்கள் விட்டு செல்லும் இந்திய அணியையும் நான் சுமந்து செய்வேன் என்று அன்றே ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சூசகமாக சொன்னவர் இந்திய அணி தலைவர் விராட் கோலி.

உலக கிரிக்கெட் அரங்கில், ஆஸ்திரேலிய வீரர்கள், எதிரணியினரை சீண்டுவதில் கில்லாடிகள் அவர்களுக்கே  அவர்களின் பாணியில் நாங்கள் யாருக்கும் இழைத்தவர்கள் இல்லை என்ற பாணி சீண்டியும், மட்டையால் பதிலடி கொடுத்தும் வெற்றிகள் பல பெற்றவர் இந்திய அணி தலைவர் விராட் கோலி. அவரின் போதைக்குறை இந்திய உலக கோப்பை வெல்ல முடியவில்லை.

இதன் காரணமாகவும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்திய அணியில் பல மாற்றங்கள்.  இந்நிலையில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது . செஞ்சூரியனில் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி  இந்திய அணி வரலாற்றில் முதல் முறையாக செஞ்சூரியனில் மைதானத்தில் வெற்றி பெற்று விராட் கோலி அணி இமாலய சாதனை படைத்தது.

இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கடைசி நேரத்தில் தோள்பட்டை வலி காரணமாக  விளையாடாத நிலையில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள்  பல அக்கப் போர்களை இந்திய வீரர்களுக்கு செய்தனர். இந்திய வீரர்களின் கவனத்தை குலைக்கும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரிஷப் பண்ட்க்கு ஷாட் பாலாக வீசியும் கேலியும் செய்ய, ரிஷப் பண்டை டக் அவுட்டாகி வெளியேறினார்.

மேலும் பும்ரா பேட்டிங் செய்த போது, அவருக்கு காயம் ஏற்படுத்தும் விதமாக பந்துவீசி சண்டைக்கு அழைத்து வம்பிழுத்தனர். இதனால் மார்கோ ஜென்சனுக்கும், பும்ராவுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ரிஷப் பண்ட் மற்றும் தற்காலிக கேப்டன் கே.எல்.ராகுலையும் இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் வம்பிழுத்தனர்.

காட்டில் தன்னுடைய குட்டிகள் விளையாடுவதை சிங்கம் தூரத்தில் இருந்து ரசித்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை போல இந்திய வீரர்களின் விளையாடையும், தென்னாப்பிரிக்க வீரர்களின் சீண்டல்களையும் இந்திய அணியின் சிங்கம் விராட் கோலி பார்த்து கொண்டு தான் இருந்தார். இதற்கான பதிலடியை நியூலேண்ட்ஸ்  மைதானத்தில் கண்டிப்பாக பல மடங்கு விராட் கோலி தருவார் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.