செஞ்சூரியனில் டெஸ்ட் வரலாற்றில் விராட் கோலி அணி இமாலய சாதனை

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. மூன்று நாட்கள் மட்டுமே மீதமிருந்ததால் “ஒன் டே” போல விளையாட மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்களை இழக்க இந்திய அணி இன்னிங்சில 327 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய 16 ரங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இந்நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய மறுபடியும் “ஒன் டே” போல விளையாட 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வந்தது.

இந்நிலையில், நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. வெற்றிபெற மேலும் 211 ரன்கள் தேவை என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று களமிறங்கியது. இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் தென்னாபிரிக்கா அணியை நிலைகுலைய செய்தது.

தென்னாபிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் செஞ்சூரியனில் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்று விராட் கோலி அணி இமாலய சாதனை படைத்துள்ளது.