காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ பக்கங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கோவிட் -19 தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதுதான் கோவிட் -19 க்கு எதிரான போரில் வெற்றி பெற ஒரே வழி என்று உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யாதது ஏன்?
மத்திய அரசு வெளியிடும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களுக்கும், சுடுகாடுகளில் இருந்து பெறப்பட்ட அதிகாரபூர்வமற்ற புள்ளி விவரங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு காணப்படுவது ஏன்? கோவிட் -19 தொடர்பான தகவல்களை தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்துவதற்கு பதிலாக, தனது பிரசார சாதனமாக மத்திய அரசு பயன்படுத்துவது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.