ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் ‘அப்பு’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபட்ட புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார்.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு” – என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்த தந்தையை போல மகனும் அழியா புகழை பெற்று இறந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஏராளமான ரசிகர்கள் தனியார் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டு அப்பு, அப்பு எழுந்திடுங்கள் எழுந்திடுங்கள், எங்களை பாருங்கள், என கதறி அழுத காட்சிகள் இன்னமும் கண்களை விட்டு மறையவில்லை. புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி அவரது கண்கள்ளும் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் இன்றைய சமுதாயம் பணம் என்னும் போதைக்கு அடிமையாகி மனிதன் எதையெல்லாம் செய்ய கூடாதோ அதையெல்லாம் செய்து பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறான். இதன் விளைவுகள் உலகெங்கும் லஞ்சமும், உழலும் தலைவிரித்தாட பல்லாயிரக்கணக்கானோர் பசியும் பட்டினியுமாக மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
கிராமத்திலிருக்கும் கடைநிலை ஊழியரில் தொடங்கி, கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ் செயலாளர்கள் வரைக்கும் பங்குப் பணம் பாய்ந்ததன் விளைவாக அவர்கள் இன்று மாடமாளிகைகளில் கொழிக்கின்றனர். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதுபோல… ஒரு காலத்தில் ஓட்டை குடிசைக்கே வழியில்லாமல் இருந்த சிலர்… இன்று இரண்டு மூன்று கார்கள், பல பங்களாக்கள் என்று சொத்துக்கள் குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இவர்களெல்லாம் பள்ளிகள், நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களை கண்டவர்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துக் கொடுத்து சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டவர்கள். மேலும் சிலர் .. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கனிம வளங்களையும் ஊரறிய கொள்ளை அடித்து உலையில் போட்டவர்கள். இதனால் பல நீர்நிலைகள், அரசுக்குச் சொந்தமான நிலங்களான காடுகள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கல்வி வள்ளல்கள் என்கிற பெயரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தன்னுடைய கல்விக்கூடத்தை ஏரிகளுக்குள்தானே கட்டி வைத்திருக்கிறார்க்குள்!
மேலும் எப்பொழுது தொழிற்புறமயமாக்கல் மற்றும் நகர்ப்புறமயமாக்கல் என்று உலகம் வளர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே பல பசையுள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்கள் அதையொட்டியுள்ள பகுதிகள் செல்வம் கொழிக்கும் பூமிகளாக மாறிவிட்டன.
எந்த செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சியைப் பார்த்தாலும் வீடு கட்ட, மனை வாங்க 1 சென்ட் நிலம் 50 ஆயிரம் ரூபாய் என நடிகர், நடிகைகள் கூப்பாடு போட 30 வகையான பயிர்கள் விளையும் விவசாய பூமியை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற பழமொழியை மறந்து பிளாட் போட்டு விற்க ஆரம்பித்தார்களே அப்பொழுதிலிருந்து விவசாயி நிலங்கள் தமிழகம் முழுவதும் பிளாடாக மாற்றப்பட்டு வருகிறது.
மலைகளின் அரசியான நீலகிரியானது கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஒத்தக்கல்மந்து என தோடா மொழியில் அழைக்கப்பட்ட உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. உதகமண்டலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூரும் 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரியும் அமைந்துள்ளது. மேலும் தாவரவியல் பூங்கா, படகு சவாரி, பல வண்ண நிறங்களில் ஏராளமான பூக்கள் அணிவகுத்து இருக்கும் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் என சுற்றுலா தலமாக உதகமண்டலம் அமைந்துள்ளது.
ஆனால், இயற்கை வளங்கள் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தையும் மாஃபியாக்கள் விட்டு வைக்கவில்லை. விவசாய நிலங்களை இன்று அவரவருக்கு சேரவேண்டிய அவரவர் பார்க்க விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்று மாட மாளிகைகள், கூட கோபுரங்களாக மாறிக் கொண்டுள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
தொடரும்….