16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கியது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், கடந்த 17 -ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றது.
முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வங்காளதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற பப்புவா நியூ கினியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தியது.
மேலும் இன்று நடைபெற்ற ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்து சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-2-ல் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ஸ்காட்லாந்து இணைத்துக்கொண்டது.
அதேபோல ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியுற்ற வங்காளதேசம் அணி ஓமன் அணியை 26 ரன்கள் வித்தியாசத்திலும், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணியை 84 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இரண்டாவது இடம் பிடித்த வங்காளதேசம் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி ஏற்கனவே குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுடன் வங்காளதேசம் தன்னை கொண்டது.