சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர். ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் நோய் தாக்கி இதுவரை சீனாவில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸின்ஹுவா மருத்துவமனையில் 62 வயதான லியாங் வுடோங். மருத்துவரை இந்த கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மருத்துவருக்கு 9 நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்தார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.