அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 36-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கினர்.
கார்த்திக் தியாகி 3.2 ஓவரில் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்த்தார். சேத்தன் சகரியா 4.1 ஓவரில் பிருத்வி ஷா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தலைவர் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். முஸ்தபிசூர் ரஹ்மான் 11.4 ஓவரில் ரிஷப் பண்ட் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ஷிம்ரன் ஹிட்மயர், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ராகுல் தேவாட்டியா 13.2 ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லலித் யாதவ், ஷிம்ரன் ஹிட்மயருடன் ஜோடி சேர்த்தார். முஸ்தபிசூர் ரஹ்மான் 16.3 ஓவரில் ஷிம்ரன் ஹிட்மயர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல், லலித் யாதவ்வுடன் ஜோடி சேர்த்தார்.
சேத்தன் சகரியா 18.2 ஓவரில் அக்சர் பட்டேல் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், லலித் யாதவ்வுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சேத்தன் சகரியா, முஸ்தபிசூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆவேஷ் கான் முதல் ஓவரின் கடைசி பந்தில் லியாம் லிவிங்ஸ்டோன் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 1. 1 ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 4. 2 ஓவரில் டேவிட் மில்லர் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மஹிபால் லோமூர், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். ககிசோ ரபாடா 10. 2 ஓவரில் மஹிபால் லோமூர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ரியாங் பராக், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் சஞ்சு சாம்சன்ஸ் நிலைத்து விளையாடிய நிலையில் மீண்டும் அக்சர் பட்டேல்11.5 ஓவரில் ரியாங் பராக் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர் .
அடுத்து களமிறங்கிய ராகுல் தேவாட்டியா, சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 17. 2 ஓவரில் ராகுல் தேவாட்டியா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய தம்ரைஸ் ஷம்ஷீ., சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 17. 2 ஓவரில் ராகுல் தேவாட்டியா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன்ஸ் 70 ரன்கள் எடுத்தும் ஆட்டம் வீணானது. முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.