IPL வரலாற்றிலேயே 14 வயதில் களமிறங்கிய முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. IPL -2025 தொடரின் 36-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை ரியான் பராக் ஏற்றுக் கொண்டார்.
அதேபோல் இந்த போட்டியில் 14 வயதாகும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக IPL வரலாற்றிலேயே 14 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை விளாசியது.
இதன்பின் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார். இந்த ஓவரிம் 4-வது பந்தை எதிர்கொள்ள வைபப் சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் கொஞ்சம் விலகி சென்று கவர்ஸ் திசையை நோக்கி சிக்ஸ் அடித்து அலற வைத்தார்.
IPL தொடரில் விளையாடிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆவேஷ் கான் வீசிய 2-வது ஓவரிலும் சிக்ஸ் விளாசி அசத்தினார். IPL மெகா ஏலம் நடைபெற்ற போது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13 அவரின் அடிப்படை விலை 30 லட்சமாக தான் இருந்தது. ஆனால் பல அணிகளும் அவருக்காக போட்டி போட்ட அவருடைய விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து.
இந்நிலையில் 14 வயதிலேயே பயிற்சி முகாமில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவருக்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கியது. திடீரென சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக வந்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.